வீடியோவில் இருப்பது நான்தான்? வைரலாகும் ஸ்ருதி நாராயணின் இன்ஸ்டா பதிவு!

Shruthi Narayanan
ShruthiNarayanan: தமிழ் சின்னத்திரையில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணின் வீடியோ ஒன்று கசிந்த விவகாரத்தில் தற்போது நடிகை போட்டிருக்கும் பதிவு தற்போது வைரலாகி இருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா கேரக்டரில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். இவர் ரோகிணிக்கு தோழியாக குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்து வந்தார். காமெடிகளிலும் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன்னர் இவருடைய ஆபாச வீடியோ ஒன்று வெளியானதாக தகவல் பரவியது. 14 நிமிடம் ஓடும் வீடியோவில் யாருடனோ வீடியோ கால் பேசப்படுகிறது. அதில் உடை இல்லாமல் அவர் சொல்வதை எல்லாம் இவர் செய்வது போல காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து சமூக வலைத்தளமே இதே பேச்சாக பரவியது. ஒவ்வொருத்தரும் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதில் சம்மந்தப்பட்ட நடிகை ஸ்ருதி நாராயணின் உடனே தன்னுடைய கணக்கை பிரைவேட் மோடுக்கு மாற்றினார். இருந்தும் ரசிகர்கள் அவர் குறித்தும் வைரல் வீடியோ குறித்தும் பேசிக்கொண்டே இருந்தனர்.
இந்நிலையில் ஸ்ருதி தன்னுடைய ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டா கணக்கை பப்ளிக்கிற்கு மாற்றி ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில் ஏஐ மற்றும் ரியல் என ஒரு வீடியோவை வெளியிட்டு இந்த வீடியோ ஏஐ மூலம் செய்யப்பட்டு இருப்பது போல இவர் சொல்கிறாரோ எனக் கேள்விகள் எழுந்துள்ளது.
ஆனால் இந்த வீடியோவில் பட வாய்ப்பிற்காக இவர் இப்படி நடந்து இருக்கலாம். அதை யாரோ வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் சில தகவல்கள் பரவி இருக்கிறது. இருந்தாலும் ஒரு பெண்ணின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கும் விதமாக இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தற்போது இவ்விவகாரம் குறித்து ஸ்ருதி ஓபனாக பதிவிட்டு இருக்கிறார். அதில், உங்களுக்கு இந்த விவகாரம் காமெடியாக இருக்கலாம். ஆனால் எனக்கும், என் குடும்பத்துக்கு இது கொடுமை. அதிலும் எனக்கு ரொம்ப கஷ்டமான காலமாக இருக்கிறது.
நானும் பெண் தான் எனக்கு வலிக்கும். என் நெருங்கிய வட்டாரத்துக்கும் வலிக்கும். நீங்கள் அதை ரொம்பவே வலிக்க வைக்கிறீர்கள். தயவு செஞ்சி எந்த வீடியோவையும் பரப்பாதீங்க. வீடியோ பாக்க வேண்டும் என்றால் உங்க அம்மா, தங்கை அல்லது மனைவி வீடியோவை பாருங்க. அவங்களுக்கு என்னுடைய உடம்புதான் இருக்கு எனக் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.