அவர் சொன்னப்படியே தான் நான் செஞ்சேன்… வீடியோ சர்ச்சைக்கு பிறகு பேசிய ஸ்ருதி நாராயணன்!

ShruthiNarayanan
ShruthiNarayanan: சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா கேரக்டரில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணன் சமீபத்திய நாட்களாக வைரல் சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில் முதல்முறையாக அவர் வெளியுலகத்தில் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொடராக ஒளிபரப்பாகி வருவது சிறகடிக்க ஆசை. இதில் வில்லி ரோகிணியாக நடிக்கும் கேரக்டருக்கு தோழியாக வித்யா கேரக்டரில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். இவருக்கு சின்ன ரோல் தான் சீரியலில் கொடுக்கப்பட்டு வந்தது.
தற்போது திடீரென அவருக்கு காதல் கதையை தொடக்கி அந்த காட்சிகள் ஒரு பக்கம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் திடீரென இவர் ஆபாச வீடியோ கசிந்தது. முதலில் இது சாதாரணமாக ரசிகர்களால் பரப்பப்பட்டு வந்தது. ஆனால் அது பின்னர் பெரிய வைரலாக மாறியது.
இதில் முதலில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை லாக் செய்த ஸ்ருதி நாராயணன் பின்ன தைரியமாக அதை ஓபன் செய்து இந்த வீடியோ ஏஐ என்றும் இதை வெளியிடுவதால் என்னுடைய குடும்பம் மற்றும் என்னுடைய மனநிலையை யோசித்துப் பாருங்கள் எனவும் காட்டமாக பேசியிருந்தார்.
சர்ச்சைக்கு பின் Guts 💪ஆக பேசிய Shruthi narayanan ! Guts Audio Launch | Jaguar Thangam #shortshttps://t.co/Wn9d8wf6mw#shruthinarayanan #gutsaudiolaunch #jaguarthangam pic.twitter.com/lFxX2K0C7i
— Friday Facts (@fridayfacts_) April 8, 2025
உங்களுக்கு இது சாதாரணமாக வீடியோவாக இருக்கலாம். எனக்கு அப்படி கிடையாது. இதை விரும்பி பகிரும் பலரும் அவர்களுடைய தங்கை மற்றும் அம்மாக்களை சென்று பார்க்கலாம் எனவும் அவருடைய பதிவு வைரல் ஆகி வந்தது. இருந்தும் 20 ஆயிரம் ஃபாலோயர் வைத்திருந்த ஸ்ருதி நாராயணன் தற்போது 2 லட்சத்தினை நெருங்கி விட்டார்.
இந்நிலையில் முதல்முறையாக அவர் நடித்திருக்கும் கட்ஸ் படத்தின் விழா நேற்று நடந்தது. இதில் செக்கண்ட் ஹீரோயினாக நடித்திருக்கும் ஸ்ருதி நாராயணன் தைரியமாக கலந்துக்கொண்டார். அப்படி அவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இந்த விழாவில் பேசிய அவர், எனக்கு இந்த இடம் புதிது. ஆனால் எனக்கு இயக்குனர் சரியாக சொல்லி கொடுத்து நடிக்க வைத்தார். அவருக்கும் இது புதுசு என நம்பவே முடியவில்லை. முதிர்ந்தவர் போல தேவையான இடங்கள் எனக்கு நடித்து காட்டியும் புரிய வைத்தார் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.