Connect with us
saravana store

போன் நம்பரை கேட்ட ரசிகருக்கு உடனே நம்பரை கொடுத்த ஸ்ருதிஹாசன்!

shruti hassan

latest news

போன் நம்பரை கேட்ட ரசிகருக்கு உடனே நம்பரை கொடுத்த ஸ்ருதிஹாசன்!

கமல், ஷாருக்கான், வாலி, வசுந்தராதாஸ், கமலினி முகர்ஜி ஆகியோர் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்பிக்கிடையி வெளியான படம் ஹே ராம். இப்படம் யாருக்கும் புரியவில்லை என தோல்வியைத் தழுவியது. ஆனால், இப்படம் இன்றளவிலும் ரசிகர்களால் பேசப்படும் படமாக உள்ளது.

இப்படத்தில் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் குழந்தை நட்சத்திரமாக ஒரு காட்சியில் நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் ராம் ராம் என்ற பாடலையும் தனது தந்தை கமலுடன் சேர்ந்து பாடியிருப்பார். இதன்பின் கடந்த 2009ல் லக் என்ற ஹிந்தி படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் இவர் சூர்யா நடிப்பில் கடந்த 2011ல் வெளியான 7ம் அறிவு படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன்பின் தனுஷுடன் இணைந்து 3 படத்திலும், விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம் ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்து முன்னணி நடிகையானார்.

தமிழைப்போலவே தெலுங்கு, ஹிந்தியிலும் இவர் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். அஜித் நடிப்பில் வெளியான, வீரம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார்.

shruti hassan

shruti hassan

இப்படங்களில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இதுமட்டுமல்லாமல் மகேஷ் பாபுவுடன் ஆகடு படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் கடந்த மாதம் லாபம் படம் வெளியானது. இதில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களது போன் நம்பர் கொடுங்கள் என கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காமல் எனது போன் நம்பர் 100 என கூறி கலாய்த்தார்.yyyyyyyy போட்ட பதிவு🙄

இன்று திருமண நாளில் நாளில் சமந்தா போட்ட பதிவு.இவரே கடந்த ஆண்டு தனது திருமண நாளில், கணவர் நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நீ எனக்கானவன் நான் உனக்கானவள்.இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கணவா என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top