சுடர்மணி ஜட்டி விளம்பரம் காமெடி ஞாபகம் இருக்கா?.. ஸ்ருதிஹாசன் பண்ண வேலையை பாருங்க!..

கஜினி படத்தில் பெரிய விளம்பரங்களில் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றும் சூர்யாவை சுடர்மணி ஜட்டி விளம்பரத்தில் நடிக்கிறீயா என்றும் அசின் கேட்பார். அந்த காமெடி தான் சட்டென ஞாபகம் வருது ஸ்ருதிஹாசனை பூமர் உள்ளாடைகள் விளம்பரத்தில் பார்த்ததும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஏம்மா சலார் படத்தில் நடித்தும் அடுத்து பெரிய பட சான்ஸ் கிடைக்கலையாம்மா என்றும் ஸ்ருதிஹாசனை ட்ரோல் செய்து வருகின்றனர். நாளை பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், ஸ்ருதிஹாசன் அந்த படத்துக்கு தொடர்ந்து நெகட்டிவ் விளம்பரம் தான் செய்து வருகிறார் என பிரபாஸ் ரசிகர்களே திட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: டங்கி ட்விட்டர் விமர்சனம்: 3 இடியட்ஸ் படத்துக்கு பிறகு ராஜ்குமார் ஹிரானி சம்பவம்.. செம ஷாருக்கான்!
சமீபத்தில் 8 ஆண்டுகள் மது போதைக்கு அடிமையாக இருந்தேன் என ஸ்ருதிஹாசன் பேசியதும் அந்த படத்துக்கு நெகட்டிவாகவே மாறிவிட்டதாக ட்ரோல்கள் குவிந்தன. உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு பக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஹோஸ்ட் பண்ணி ரசிகர்களிடம் ரோஸ்ட் ஆகி வரும் நிலையில், உள்ளாடை விளம்பரத்தில் நடித்து ஸ்ருதிஹாசன் இன்னொரு பக்கம் மொக்கை வாங்கி வருகிறார்.
ஆனால், சலார் படம் வெளியான பின்னர் ஸ்ருதிஹாசனின் மார்க்கெட் கடகடவென உயர்ந்து விடும் என்றும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத்தான் போகுது பாருங்க என ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா!.. கங்குவா ஹீரோயினுடன் டூபீஸ் உடையில் இன்னொரு பீஸ்.. யாருன்னு பாருங்க!
ரூல்ஸ் வேண்டாம் ரீல்ஸ் போடு என அந்த விளம்பரத்துக்கு பாட்டுப் பாடி ஸ்ருதிஹாசன் போடும் ஆட்டத்தை தான் கொஞ்சம் கூட சகிக்க முடியல என நெட்டிசன்கள் புலம்பித் தீர்த்து வருகின்றனர்.
Shruthi Haasan | POOMER💃
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 20, 2023