Cinema News
8 வருஷமா ஃபுல் மப்புல தள்ளாடிய கமல் பொண்ணு!.. வாயைக் கொடுத்து பிரபாஸ் படத்துக்கு வேட்டு வச்சிட்டாரே!..
உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் சுமார் 8 ஆண்டுகள் தான் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறி அதிர்ச்சியை கிளப்பி இருந்த நிலையில், ஏகப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் மற்றும் செய்திகள் வெளியாகி அவரை அசிங்கப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல என்னை குடிகாரின்னு முத்திரைக் குத்தி அசிங்கப்படுத்தணும் அவ்வளவு தானே என மன வேதனையுடன் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாமனார் வீட்டை காலி பண்ணிட்டு மும்பையில் செட்டில் ஆக காரணமே இதுதான்!.. ஜோதிகாவின் அடடே விளக்கம்!..
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயின். இந்த ஆண்டு தெலுங்கு திரையுலகில் வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா மற்றும் ஹாய் நான்னா படத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் என அமர்க்களப்படுத்தி வரும் ஸ்ருதிஹாசன் அடுத்ததாக பிரம்மாண்டமான சலார் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
வரும் டிசம்பர் 22ம் தேதி சலார் படம் வெளியாக உள்ள நிலையில், அதனை முன்னிட்டு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தான் போதை பொருளுக்கு அடிமையானவள் கிடையாது. ஆனால், ஆல்கஹாலுக்கு அடிமை என பேசியுள்ளார். அதில், வெட்கப்படுவதற்கும் அவமானப்படுவதற்கும் ஒன்றுமே இல்லை. இங்கே யாருதான் குடிக்காமல் இருக்கின்றனர். பார்ட்டிகளுக்கு அடிக்கடி சென்று சென்று அந்த பழக்கம் ஒட்டிக் கொண்டது என கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: ஏன்டா இப்படி பண்ணிட்டீங்க.. மனசு உடைந்து திடீரென கதறி அழுத மீசை ராஜேந்திரன்!.. ஏன் தெரியுமா?..
அவரது பேட்டி சலார் படத்துக்கே பிரச்சனையை உண்டு செய்ததோ என்னவோ தெரியவில்லை திடீரென இப்படியொரு அழுகாச்சி போஸ்ட்டை ஸ்ருதிஹாசன் பதிவிட்டு இருக்கிறார். அதற்கு கீழ் பிரபாஸ் ரசிகர்கள் ஸ்ட்ராங்காக இருங்க ஸ்ருதி என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.