புளியங்கொம்பா புடிக்கும் ஸ்ருதிஹாசன்!.. திடீர்னு கமல் பொண்ணுக்கு அடிக்கும் அடுத்தடுத்த ஜாக்பாட்!..

Published on: March 27, 2024
---Advertisement---

கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்து சமீபகாலம் வரை டல் அடித்து வந்த நிலையில், தற்போது தனது ரூட்டை மாற்றி ஹிட் ஹீரோயினாக மாறும் முயற்சியில் ஏகப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்.

ஸ்ருதிஹாசனின் தங்கை அக்ஷரா ஹாசன் சினிமாவில் இருந்து காணாமல் போன நிலையில், தங்கையைப் போல இல்லாமல் எப்படியாவது சினிமாவில் முன்னணி நடிகையாக வர வேண்டும் என முயற்சி செய்து வரும் ஸ்ருதிஹாசன் கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: விரும்புகிறேன் படத்தில் நடிச்சது சினேகாவே இல்லையாம்… ஏமாத்திட்டாங்க மக்கா!

இந்நிலையில் அடுத்ததாக, கேஜிஎஃப் ஹீரோ யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பாலிவுட் நடிகை கரீனா கபூர் டாக்ஸிக் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நடிகர் யஷ்ஷின் அக்காவாக அந்தப் படத்தில் கரீனா நடிக்கப் போவதாகவும் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: நடிகையை சோதித்து பார்க்க சந்திரபாபு செய்த வேண்டாத வேலை.. நடந்த ட்விஸ்ட்தான் வேற

ஸ்ருதிஹாசன் மட்டுமின்றி கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்துள்ள பாலிவுட் நடிகை கியாரா அத்வானியும் யஷ்ஷுக்கு ஜோடியாக நடிக்கப்போவதாக செம சூப்பரான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்த இனிமேல் ஆல்பம் பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்து ஸ்ருதிஹாசனுக்கு ஜாக்பாட் அடித்து வருகிறது.

 

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.