Cinema History
அப்பா என்னை ஒரு தடவை கூட அடிச்சதே இல்லை….நடிகை சுருதிஹாசன் பளீர் பேச்சு..!
உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசனின் அன்பு மகள் சுருதிஹாசன். இவர் தான் மூத்த மகள். திரையுலகில் கால் பதித்து 13 ஆண்டுகள் ஓடிவிட்டன. இவர் பாடகி, நடிகை, கம்போசர், டேன்சர் என சினிமாவில் ஒரு ஆல் ரவுண்டர். இவர் பேச்சு ஒரு வெள்ளந்தியாக இருக்கும்.
சுருதி ராஜலெட்சுமிஹாசன் தான் இவரது இயற்பெயர். 28.1.1986ல் பிறந்தார். பள்ளியில் இவரை பூஜா ராமச்சந்திரன்னு தான் அழைப்பார்களாம். இவரோட ஒட்டுமொத்த குடும்பமும் சினிமாத்துறையில் தான் இருக்காங்க. அப்பா கமல்ஹாசன் இவரை சடகோபா என்று அன்புடன் அழைப்பார். சென்னையில் பள்ளிப்படிப்பும், மும்பை ஆண்ட்ரோஸ் கல்லூரியில் சைக்காலஜியும் முடித்துள்ளார். சின்ன வயசுல நடிப்பு மேல ஆர்வமே இல்லை. இசையில் தான் இவருக்கு அதிக ஆர்வம்.
அமெரிக்கா சென்று இசைப்பள்ளியில் படித்துள்ளார். அங்க இருக்கும்போது சிங்கர், மியூசிக் டைரக்டர், ரைட்டராகணும்னு பல கனவுகளுடன் இருந்துள்ளார். இவரது இசை ஆர்வத்திற்கு முழு காரணமும் இசைஞானி இளையராஜா தான். இவர் தேவர் மகன் படத்திற்கு இசை அமைக்கும்போது கமல் சுருதியை உடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இளையராஜா கமல் சார் உங்க பொண்ணு பாடுவாங்களான்னு கேட்டுள்ளார்.
அதற்கு கமல் பதில் சொல்வதற்குள் சுருதின்னு பேரு வச்சிருக்கீங்க…இப்ப பாடாம எப்பப்பாடுவது? பாடட்டும்னு சொல்லிட்டார். அப்போது சுருதி பாடிய பாடல் தான் போற்றிப் பாடடி பொண்ணே….பாடல். அப்போது தான் இவருக்கு மியூசிக் படிக்கும் ஆர்வம் வந்தது. அதனால் தான் அமெரிக்காவுல போய் மியூசிக் படித்தார். அப்போது பாலிவுட் ஆக்டர் இம்ரான் இவரை படத்தில் நடிக்க அழைத்தார். லக் என்ற பாலிவுட் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
தெலுங்கில் ஓ மை பிரண்ட் என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு ஸ்ரீதர் என்று வெளியானது. தமிழில் 2011ல் வெளியான ஏழாம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக அறிமுகமானார். இந்தி, தெலுங்கு படங்களுக்கு அப்புறம் தான் தமிழ்சினிமாவுக்கு வந்துருப்பதாக நினைப்பாங்க. ஆனால் இவர் 2000ல் கமலின் தயாரிப்பில் வெளியான ஹேராம் படத்திலேயே நடித்து விட்டார்.
3, பூஜை, புலி, வேதாளம் என பல படங்களில் நடித்துள்ளார். ஹேராம், வாரணம் ஆயிரம், லக், உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் பாடியுள்ளார். உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசை அமைத்துள்ளார். இதுதான் இவருக்கு இசையில் முதல்படம். ஆரம்பத்தில் இவரது அப்பா இவரின் நடிப்புக்கு பச்சைக் கொடி காட்டி விட்டார். ஆனால் இவரது அம்மாவோ நீ வேற வேலையைப் பாருன்னு சொல்லிட்டாங்க.
தசாவதாரம் படத்தில் அப்பா நடிக்கிற ஒரு கேரக்டருக்கு இவர் அமெரிக்கன் ஸ்லாங்கை அப்பா கமலுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் காதல் போதையில் இவரும் சிக்கி சர்ச்சைக்குள்ளானார். பின்னர் குடிபோதையிலும் அடிமையாக இருந்துள்ளார்.
இவருடைய சினிமா வாழ்க்கை எப்படி இருந்தது என்று இவர் பகிர்ந்துள்ளார்.
நிறைய விஷயம் கத்துருக்கேன். பர்சனலாகவும், புரொபஷனலாகவும் கத்துருக்கேன். ரொம்ப சந்தோஷம். முதல் படம் லக். இது எனக்கு இந்தியில் வந்தது. அப்போ எனக்கு என்னை சுத்தமா பிடிக்கல. அடுத்த படத்துல கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணனும்னு நினைப்பேன்.
பேசுற வாய்ஸ் வேற மாதிரி இருக்கும். நான் பாடுற வாய்ஸ் வேற மாதிரி இருக்கும். என்னோட ஸ்கூல் பிரண்ட்ஸ்லாம் சொல்வாங்க…ஏய்..எனக்கு ஜூரம் வரும்போது என் குரல் அப்படியே உன்ன மாதிரியே இருக்கும் பாரு…ன்னு சொல்வாங்க…அப்பா வந்து என்னை அடிச்சதே இல்ல. நாங்க சொல்றதை அவங்களால கேட்க முடியலன்னா ஏதோ சம்திங் ராங்னு தான் நினைப்பாரு.
நான் அப்பாவ ஏதோ சினிமால பார்த்துருந்தேன். அவரு காருல இருந்து எப்படி பல்டி அடிச்சி வெளிய வர்றாருன்னு…நான் ஸ்கூல் போக வேண்டான்னு கார் டோர திறந்து ரோட்ல பல்டி அடிச்சிட்டேன். அப்போ தான் எனக்கு பூகம்பம் லெவல்ல திட்டு விழுந்தது.
சின்னவயசுல இருந்து டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். பரதநாட்டியம் எனக்கு சுத்தமா வரல. எனக்கு சிங்கிங்கல தான் நிறைய பாராட்டு கிடைச்சது.