அப்பாக்கிட்ட இருந்து இத தான் எதிர்பார்க்கிறேன்...! திருமணம் பற்றி கூறும் சுருதி ஹாசன்....!
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன் தற்போது இந்தியா திரும்பியுள்ளார். கிட்டத்தட்ட ஓய்வு எடுப்பதற்காக இரண்டு வருடங்கள் லண்டனின் தங்கியிருந்த சுருதி ஒரு ஃபுல் எனர்ஜியுடன் திரும்பியுள்ளார். பாடல், ஆல்பம், நடிப்பு, இசை, நடனம் என பன்முக திறமைகளை உள்ளடக்கிய சுருதி வெப் சீரிஸிலும் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார்.
மேலும் பிரபாஸுடன் சலார், சிரஞ்சீவியின் சிரு 154, பாலகிருஷ்ணனுடன் nbk 101 போன்ற தென்னிந்திய படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த வருடம் எனக்கு சந்தோஷமான வருடம் தான் எனக் கூறினார். ஒரு ஆங்கில நாளிதழில் பேட்டி கொடுத்த போது இவரின் நண்பரை பற்றிய கேள்விகளுக்கு உருக்கமாக பதில் கூறினார்.
என் வாழ்க்கையில் இதுவரை அந்த மாதிரி ஒரு ஆணை நான் பார்த்ததில்லை. எல்லா வகையிலும் என்னை போன்று ஒத்துக் காணப்படுகிறார். நான் பழகிய நடிகர்களுடன் எல்லாம் டேட்டிங் செய்துள்ளேன். ஆனால் இந்த அளவிற்கு ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை என கூறினார். மேலும் திருமணம் பற்றி கேட்டதற்கு எனக்கு அதை நினைத்தாலே பதபதைக்கிறது. இப்போதைக்கு அதற்காக நேரம் இல்லை என கூறினார்.
திருமணம் பற்றி பயப்படுவதற்கு உங்கள் பெற்றோரின் வாழ்க்கை தான் காரணமா என்று கேட்டதற்கு இல்லை நான் அவர்களிடம் இருந்த அந்த நல்ல எண்ணங்களை மட்டும் தான் பெற விரும்புகிறேன். மேலும் அவர்களின் ஆரம்ப கால திருமண வாழ்க்கை நன்றாகத் தான் இருந்தது. எனக்கு அந்த சமயத்தில் உள்ள நினைவுகளை மட்டும் தான் எடுக்க விரும்புகிறேன். மற்றவை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறினார்.