’தென்றல்’ சீரியல் நடிகையின் கையை பிடிச்சு விஜய் என்ன செய்தார் தெரியுமா....? வெளிவராத சில லூட்டிகள்....!

ஆரம்ப காலங்களில் ஒரு சில படங்களில் நடித்தாலும் சீரியல் மூலம் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் சின்னத்திரை நடிகை சுருதி ராஜ். மலையாள நடிகையான இவர் தமிழில் தென்றல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். அந்த சீரியலில் நடித்ததன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கினார். அதில் சுருதியும் தீபக்கும் செய்கிற ரொமான்ஸ்கள் எல்லாம் பார்க்கவே ரசிக்க தோன்றும்.
மேலும் அழகு என்ற சீரியலில் ரேவதி, தலைவாசல் விஜய் போன்ற முன்னனி கதாபாத்திரங்களுடன் சேர்ந்து நடித்தார். அந்த சீரியலும் செம ஹிட் ஆனது. தற்சமயம் தாலாட்டு என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட எல்லா மொழி சீரியலிலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் எல்லா மொழிகளிலும் தலா இரண்டு படங்கள் நடித்து விட்டு தான் சீரியலுக்குள் வந்தாராம். இவர் மலையாளத்தில் முதன் முதலில் மம்மூட்டி கூட தான் நடித்தாராம். தமிழில் விஜய் நடித்த ‘மாண்புமிகு மாணவன்’ என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருப்பார். படத்தை விஜயின் அப்பா சந்திரசேகர் தான் தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தில் முதன் முதலில் சேலை கட்டி நடித்தாராம். ஒரு சீனில் பஸ் ஏறுவதற்காக சேலை கட்டியே ஓடி போய் அந்த பஸ்ஸை பிடிக்க வேண்டுமாம். ஆனால் அவர் சேலையில் இருந்ததால் ஓடமுடியவில்லையாம். உடனே விஜய் வந்து சுருதியின் கையை பிடித்துக் கொண்டு ஒடி காட்டுனாராம். இதை இப்பொழுது நினைக்கும் போது விஜய்யா என் கையை பிடித்தது என ஆச்சரியமாக இருக்கிறது என கூறினார்.