தனுஷை விட அதிக சம்பளம் கொடுங்க... அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன் - எத்தனை கோடி தெரியுமா?

by பிரஜன் |   ( Updated:2021-10-06 23:40:54  )
dhanush sivakarthikyen
X

dhanush sivakarthikyen

நடிகர் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின்னர் ஹீரோவாக திரைத்துறையில் நுழைந்து முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதியுடன் மறைமுகமாக ஆரம்பத்தில் போட்டியிட்டு இப்போ தனுஷ் பிழைப்பிலே கை வைத்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடித்து மளமளவென புகழும் பணமும் சம்பாதித்துக்கொண்டிருக்கும்போதே தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் இறங்க அது அவரை கடனாளியாக்கிவிட்டது.

இதனால் தான் நடிக்கும் படங்களின் கதை தேர்வில் கவனத்தை செலுத்தி ஹிட் அடிக்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தோடு படமும் சிறப்பாக வந்துள்ளதால் தனது அடுத்தப்படமான டான் படத்திற்கு சம்பளம் 30 கோடி கேட்டு லைக்கா நிறுவனத்திற்கு கெடுபிடி வைக்கிறாராம்.

sivakarthikeyan

sivakarthikeyan

என்ன சார் முதலில் 25 கோடி கேட்டீங்க இப்போ 30 கோடி கேட்குறீங்க என்றதற்கு முன்னர் டாக்டர் படம் எப்படி வரும் என்பது தெரியாது. இப்போ டாக்டர் படம் சிறப்பாக வந்ததால் என்னுடைய அடுத்தப்படமான டான் படத்திற்கு எதிர்ப்ப்புகள் அதிகரிக்கும் எனவே நீங்கள் படத்தை பார்த்துவிட்டு சம்பளம் கொடுங்கள் என கூறினாராம். நடிகர் தனுஷ் ஒரு படத்திற்கு 12 கோடி முதல் 15 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால், சிவகார்த்திகேயன் சம்பள விஷயத்தில் தனுஷையே மிஞ்சிட்டாரே என மற்ற தயாரிப்பாளர்கள் புலம்பியுள்ளனர்.

Next Story