நான் சினிமாவை விட்டு விலகுகிறேன்..! அதிருப்தியில் நடிகா் சித்தார்த்....!

by ராம் சுதன் |
siddharth
X

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் சித்தார்த் நடித்திருந்தாலும் தற்போது வரை தனக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் தான் இருந்து வருகிறார்.

இதுவரை இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சுமாரான வெற்றியை தான் பெற்றுள்ளன. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படம் தான் ஓரளவிற்கு இவருக்கு பெயர் சொல்லும் படமாக இருந்தது. அதன் பின்னர் தற்போது வரை இவரால் ஒரு ஹிட் கூட கொடுக்க முடிவில்லை.

siddharth

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சித்தார்த்தின் நிலை இதே தான். படங்கள் நடிப்பது தவிர சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் சித்தார்த் எப்போ பார்த்தாலும் டிவிட்டரில் எதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்து சர்ச்சையில் சிக்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

இப்படி உள்ள நிலையில் நான் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என சித்தார்த் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சித்தார்த் கூறியதாவது, "எனக்கான சரியான கேரக்டர் கிடைக்கவில்லை என்றால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்" என கூறியுள்ளார்.

siddharth

மேலும் சினிமாவில் இருந்து விலகி சித்தார்த் சொந்த பிசினஸ் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பிளாப் கொடுத்து வந்ததால் தான் அவர் இந்த முடிவிற்கு வந்திருப்பார் என கூறப்படுகிறது.

Next Story