உங்கள பிரைவேட்டா மீட் பண்ணனும்! ரசிகை கேட்ட கேள்விக்கு சித்தார்த் சொன்ன பதில் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் சித்தார்த். 2003 ஆம் ஆண்டில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் சித்தார்த். அந்த முதல் படத்திலேயே இளம் பெண்களின் மனதை கவர்ந்தார். துள்ளலான நடிப்புடன் அழகான முகத்தோடு பெண் ரசிகைகளை தன் பக்கம் ஈர்த்தார்.
அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் சித்தார்த். ஆனால் அந்த ஒரு கிரேஸ் அடுத்தடுத்த படங்களில் குறையத் தொடங்கியது. மேலும் அவர் நடித்த படங்களில் ஒரு சில படங்கள் எதிர்பார்த்த அளவில் போகவில்லை. அதனால் சில காலம் வாய்ப்புகள் இன்றி இருந்தார்.
மேலும் சமூக பிரச்சினைகளை கையில் எடுத்து இணையதள பக்கம் மூலமாக குரல் கொடுத்து வந்தார். எந்த விமர்சனத்திற்கும் அஞ்சாதவர் சித்தார்த். எதையும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். நடிப்பை பொறுத்த வரைக்கும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.
நடிப்பையும் தாண்டி சில ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். அழகாக பாடுவதில் வல்லவர். டைரக்ஷனிலும் ஆர்வம் அதிகமாக உள்ளவர். இந்த நிலையில் சமீபத்தில் டக்கர் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். படம் இன்னும் வெளிவரவில்லை. வருகிற 9 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கமல் நடிப்பில் தயாராகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் சித்தார்த்.
இந்த நிலையில் டக்கர் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகிறார் சித்தார்த். அந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது முழுவதும் பெண் ரசிகைகளை கொண்டு அந்த விழா கலை கட்டியது. அப்போது ஒரு பெண் ரசிகை சித்தார்த்திடம் ‘உங்களை பிரைவேட்டா மீட் பண்ணனும்’ என்று கேட்டார்.
இதையும் படிங்க :‘குட்நைட்’ சொன்னவர்க்கு குட்பையா? தமிழ் சினிமாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
அதற்கு பதிலளித்த சித்தார்த் ‘ஐய்யோ, இதுவே போதுங்க, இப்படி உங்களை சந்தித்ததிலேயே மிக்க மகிழ்ச்சியடைகிறேன், நீங்க கேட்டது பர்ஷனலா சரியிருக்காது, இருந்தாலும் நன்றி’ என்று சொல்லி அந்த பெண் ரசிகையை கட்டியணைத்து தன் அன்பை பரிமாறிக் கொண்டார்.