Connect with us

 “எனக்கு சிம்பு தான் திருமணம் செய்ய சரியான ஆள்”.. கன்னக்குழி அழகியின் சீக்ரெட் ஆசை

Cinema News

 “எனக்கு சிம்பு தான் திருமணம் செய்ய சரியான ஆள்”.. கன்னக்குழி அழகியின் சீக்ரெட் ஆசை

சிம்பு நடித்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் வருகிற 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிம்புக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது திருமணத்திற்கு ரெடியாக இருக்கும் முன்னணி கதாநாயகர் சிம்பு தான். பல வருடங்களுக்கு முன்பு சிம்பு நடிகை நயன்தாராவை காதலித்து வந்தார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

அதன் பின் சிம்பு ஹன்சிகா மோத்வானியுடன் நெருக்கமாக பழகி வந்தார். ஆனால் அந்த காதலும் சிம்புவுக்கு கைக்கொடுக்கவில்லை. ஆதலால் சிம்பு நடிப்பில் கோட்டை விட்டு “நான் இமயமலைக்கு போகிறேன், சாமியார் ஆகப்போகிறேன்” என்றேல்லாம் சொல்லி சுற்றிக்கொண்டிருந்தார்.

இதனால் அவரது சினிமே கேரியர் பாதிப்பிற்குள்ளானது. “சரியாக ஷூட்டிங்கிற்கு வருவதில்லை, டப்பிங்கை வாட்ஸ் ஆப்பில் ரெக்கார்டு செய்து அனுப்புகிறார்” என அவர் மீது பல புகார்கள். மேலும் சிம்புவின் உடல் எடையும் கூடியதால் அவரை இணையத்தில் கேலி செய்து வந்தனர்.

எனினும் பல நெகட்டிவிட்டியை எல்லாம் உடைத்து மீண்டும் இளம் சிம்புவாக மாஸாக களம் இறங்கினார். அவர் நடிப்பில் வெளிவந்த “மாநாடு” திரைப்படம் அவர் வாழ்வில் செகண்ட் இன்னிங்க்ஸில் நிகழ்ந்த முக்கிய திருப்புமுனை என்றே கூறப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடைபெறப்போவதாக சில கிசுகிசுக்கள் கிளம்பியது. எனினும் சிம்பு இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் கதாநாயகியான சித்தி இத்னானி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நிரூபர் மூன்று ரோஸ்களை தந்து அதில் ஒன்றை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புபவருக்கு தரவேண்டும்” என கூறினார்.

அப்போது சித்தி “சிம்பு தான் தமிழின் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர். அவருக்கு தான் இந்த ரோஸை கொடுக்கிறேன்” என கூறினார். சித்தி இத்னானி இவ்வாறு கூறியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சித்தி இத்னானி “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை தொடர்ந்து “நூறு கோடி வானவில்” என்ற திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாணுடன் ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top