சித்திக்கு ஜோடியாகும் சிம்பு.. என்னங்கடா பேரே ஒரு தினுசா இருக்கு!!

by ராம் சுதன் |   ( Updated:2022-01-03 09:05:30  )
simbu
X

ரசிகர்களால் செல்லமாக யங் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் சிலம்பரசன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாநாடு' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பின் சிம்பு படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மாநாடு படத்தின் வெற்றியால் சிம்புவின் மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது. தற்போது சிம்பு முன்பை விட வேகமாக மளமளவென அதிகமான படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படபிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இப்படத்தின் நாயகி யார் என்பதை அறிவிக்காமல் இருந்த படக்குழுவினர் தற்போது இப்படத்தின் நாயகி யார் என்பதை அறிவித்துள்ளனர். இப்படத்தின் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி என்பவர் நடித்து வருகிறார்.

siddhi idnani-simbu

siddhi idnani-simbu

மும்பையை சேர்ந்தவரான இவர் கடந்த 2016ல் 'கிராண்ட் ஹலி' என்கிற குஜராத்தி படத்தில் நடித்திருந்தார். இதைத்த்தொடர்ந்து தெலுங்கில் ஜம்ப லக்கடி பம்பா, பிரேம கதா சித்திரம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார்.

Next Story