புடவையும் மல்லிப்பூவும் சும்மா தூக்குது!...சிம்பு பட நடிகையில் அசத்தல் கிளிக்ஸ்....
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் சித்தி இட்னானி. இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஒரு குஜராத்தி மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
தமிழில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மூலம் இவரை கவுதம் மேனன் அறிமுகம் செய்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சிம்பு – சித்தி இட்னானி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் சிறப்பாக இருப்பதாக பலரும் தெரிவித்தனர்.
சில நடிகைகளுக்கு மட்டுமே சிரித்தால் கன்னத்தில் குழி விழும். இவருக்கும் அதான் அழகு. மேலும், நூறு கோடி வானவில் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
அடுத்து தனுஷுடன் ஒரு புதிய படத்தில் ஜோடி சேரவுள்ளார். எனவே, தமிழில் இவரும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நானே பெரிய ப்ராங்க்ஸ்டர்தான் தெரியுமா… அர்ச்சனாவிற்கே அல்வா கொடுத்த முன்னணி இயக்குனர்!
இந்நிலையில், பட்டுப்புடவை அணிந்து, மல்லிகைப்பூ சூடி, அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை திருடியுள்ளார்.