மும்பையை சேர்ந்தவர் சித்தி இட்னானி. நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு நடிப்பு பட்டறையில் பயிற்சி பெற்றார். மேடை நாடகங்களிலும் நடித்தார்.

மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். மிஸ் இந்தியா அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

அப்படியே சினிமாவில் நடிக்கவும் ஆசை வந்தது. முதலில் குஜராத்தி மொழி திரைப்படத்தில்தான் நடித்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

சில தெலுங்கு படங்களில் நடித்தார். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கியுள்ளார்.

அதன்பின் முத்தையா இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்திருந்தார்.

ஒருபக்கம், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க ஆசைப்படும் சித்தி இட்னானி அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

