latest cinema news

Sigma Day 2 Box Office: வசூலில் சரிவை சந்திக்கும் சிக்மா.. 2 ம் நாள் வசூல் நிலவரம்

வசூலில் சரிவை சந்திக்கும் சிக்மா.. 2 ம் நாள் வசூல் நிலவரம்

ஜேசன் சஞ்சய் இயகத்தில் நடிகர் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சிக்மா . லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகப்படமாக உருவாகியிருப்பதால், படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

படத்தின் கதையைப் பொறுத்தவரை, தனது தாயின் நினைவாக நடத்தி வரும் நூலகத்தை காப்பாற்றவும், தந்தை வாங்கிய கடனை அடைக்கவும் சந்தீப் கிஷன் முயற்சிக்கிறார். இதற்கிடையே அவரிடம் கிடைக்கும் ஒரு பென் டிரைவ், அதில் இருக்கும் முக்கியமான தகவல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவாகும் பிரச்சினைகள் என கதை ஹெய்ஸ்ட் மற்றும் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் நகர்கிறது.

சிக்மா படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் கலவையான கருத்துகளே வெளியாகியுள்ளன. குறிப்பாக, படத்தின் முதல் பாதி ஓரளவுக்கு விறுவிறுப்பாக இருப்பதாகவும், கதாபாத்திரங்களின் அறிமுகத்திற்குப் பிறகு படம் த்ரில்லர் பாணியில் வேகமெடுப்பதாகவும் சில விமர்சனங்கள் குறிப்பிட்டுள்ளன. சந்தீப் கிஷனின் நடிப்பும், படத்தின் ஒளிப்பதிவு, இசை மற்றும் சண்டைக்காட்சிகளும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன.

அதே நேரத்தில், படத்தின் நீளம், சில லாஜிக் குறைகள் மற்றும் திரைக்கதையில் இருக்கும் குழப்பம் ஆகியவை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. சில விமர்சகர்கள், படத்தின் அடிப்படை கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், அதனை இன்னும் விறுவிறுப்பான திரைக்கதையாக உருவாக்கியிருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சிக்மா படத்தின் வசூலில் இரண்டாவது நாளில் சரிவு ஏற்பட்டுள்ளது. வர்த்தக கண்காணிப்பு தளமான Sacnilk வெளியிட்டுள்ள தரவுகளின்படி, படம் 2-வது நாளில் இந்தியாவில் ரூ.1.50 கோடி நெட் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் படம் ரூ.2.35 கோடி நெட் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இரண்டாவது நாளில் வசூல் சுமார் 36 சதவீதம் குறைந்துள்ளது.

இதையடுத்து, சிக்மா திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் மொத்தமாக ரூ.3.85 கோடி நெட் வசூல் செய்துள்ளதாக Sacnilk தரவுகள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களுக்கான இந்தியா மொத்த வசூல் சுமார் ரூ.4.40 கோடி என அந்த தளம் குறிப்பிட்டுள்ளது.

Author
Sai Vikas ✓

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]