reviews

கதைதான் பழசு என்றால் திரைக்கதை அதைவிட பழசு.. புளூ சட்டை மாறனின் சிக்மா விமர்சனம்

தமிழக முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நேற்று வெளியான படம் சிக்மா

தமிழக முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நேற்று வெளியான படம் சிக்மா. சந்திப் கிஷன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தினை லைக்கா புரொடக்சன் தயாரித்துள்ளது.விஜய் கமன் இயக்கியுள்ள படம் என்பதால் திரையுலகில் இப்படம் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்றுதான் கூரவேண்டும்.

இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் புளு சட்டை மாறன் சிக்மா படம் குறித்த விமர்சனத்தை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

ஹீரோ தனது குடும்பத்திற்கு சொந்தமான பிரைவேட் லைப்ரரி ஒன்றை நடத்துகிறார். அந்த நுலகத்தின் மேல் கடன் இருக்கிறது. சுமார் 1 கோடிக்கு மேல் கடன் இருக்கிறது. அந்த கடனை அடைக்க என்னவழி என்று நெருக்கடியில் ஹீரோ தேடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கேசினோ நடத்துகிற தொழிலதிபர் ஒருவருக்கு டெக்கி என்ற ஒரு நண்பன் இருக்கிறார். அந்த நண்பன் இந்த கெசினோ லாபகரமாக கொண்டு செல்ல தன்னிடம் ஐடியா இருக்கிறது என்கிறான். அதற்கு கேசினோ ஓனர் நீ அந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்று. அதற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று தன்னுடைய கஜானா சாவியை நண்பரிடம் கொடுக்கிறார். இதற்க்கு பின் அந்த நண்பர் டெக்கியும் காணவில்லை அந்த சாவியையும் காணவில்லை. இந்த பிரச்சனையில் ஹிரோ எப்படி வந்தார் அதற்கு பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.

இந்த படத்தின் இயக்குனர் வெளி நாடுகளில் படித்து வந்தவர் என்பதால் அவரிடம் அதிகம் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் எடுத்துக் கொண்ட கதையை ரொம்ப அதர பழசான கதையும், அதைவிட அதர பழசான திரைக்கதையும் . வழக்கமாக ஒரு திரைப்படத்தில் வழகமாக ஒரு பழைய கதையை எடுத்து புது திரைகதை அமைப்பார்கள் அல்லது புது கதையை எடுத்து பழைய திரைக்கதையை வைப்பார்கள். ஆனால் இந்த படத்தில் ரெண்டுமே பழசாகி போச்சு. இந்த இயக்குனரிடமிருந்து யுனிக் ஐடியா வருமா என்று பார்த்தால் மிக பழசான ஐடியாவாகவே இருக்கிறது. படம் முழுக்க நிறைய தப்பு தப்பான விசயங்கள் இருக்கிறது. அந்த காலத்தில் ஜெய்சங்கர் நடித்த வைரம் என்ற படம் உண்டு. அந்த மாதிரி ரெண்டு படங்கள் பார்த்திருந்தால் கூட நல்ல படம் கொடுத்திருக்கலாம். அடிப்படையிலேயே தவறான கதையை எடுத்துள்ளார். தவறான பாதையை தேர்ந்தெடுத்து சரியான இழக்கை அடைய முடியுமா? அடுத்த படத்திலாவது நல்ல கதையை தேர்ந்தெடுக்கட்டும் என்று கூறியுள்ளார்.

Author

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]