பெரிய பாய்க்கே விபூதி அடித்த ஏ.ஆர்.முருகதாஸ்… பெத்த அடி வாங்கும் சிக்கந்தர் வசூல்!

by Akhilan |   ( Updated:2025-04-03 08:01:04  )
salman
X

salman

AR Murugadoss: தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சிக்கந்தர் படத்தால் தற்போது சல்மான்கான் தரப்பு கடும் கோபத்தில் இருக்கின்றனராம்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவராக இருந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். கஜினி, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் சமீபத்திய வருடங்களாக கோலிவுட் பக்கமே வராமல் இருந்தார்.

ஆனால் பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் படத்தினை இயக்கி வந்தார். அப்படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பல மாதங்களாக நடந்து வந்த சிக்கந்தர் திரைப்படம் மார்ச் 30ந் தேதி பல திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பெரிய ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாலிவுட்டுக்கே பெரிய அதிர்ச்சி கிடைத்துள்ளது.

சூப்பர்ஸ்டார் என புகழப்படும் சல்மான் கானின் படம் தற்போது உலகம் முழுவதிலும் நான்கு நாட்களை கடந்த நிலையில் 160 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாம். இது அவரின் படங்களின் வசூலில் மிகவும் மோசமான ரெக்கார்ட் எனவும் கூறப்படுகிறது.

sikandar

சமீபத்திய நாட்களாகவே பாலிவுட் படங்கள் எல்லாமே வசூலில் அடி வாங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சல்மான் கான் படமே பெரிய அளவில் குறைந்து இருப்பதால் பாலிவுட் திரையுலகமே கடும் கவலையில் இருக்கின்றனர்.

இதனால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி 2 படத்தில் நடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த அமீர்கான் கூட தற்போது அந்த யோசனையில் இருந்து பின் வாங்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சிக்கந்தர் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே விஜயின் சர்கார் ரீமேக்காக இருக்கும் எனக் கூறப்பட்டது. டிரெய்லர் கூட ஓரளவு நல்ல விமர்சனம் பெற்ற நிலையில் இப்படம் பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story