சிம்புவுக்கு பட வாய்ப்புகள் இல்லையா? புரியாத புதிரா இருக்கேப்பா!..

by Arun Prasad |
Silambarasan TR
X

Silambarasan TR

இடைப்பட்ட காலத்தில் சிம்புவின் மீது பல புகார்கள் எழுந்தன. காதல் தோல்வி காரணமாக நடிப்பின் மீது சிம்பு ஈடுபாடு இல்லாமல் இருப்பதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஷூட்டிங்கிற்கு சரியாக ஒத்துழைப்பு தர மறுக்கிறார் எனவும் டப்பிங்கிற்கு கூட வர மறுக்கிறார் எனவும் பல பேச்சுக்கள் அடிபட்டன.

Silambarasan TR

Silambarasan TR

சிம்புவின் இது போன்ற போக்கால், அவரின் கேரியரே போய் விட்டது என்று விமர்சனங்கள் வந்தன. எனினும் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் திடீரென தனது உடலை மெருகேற்றி “மாநாடு” திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் சிம்பு.

அதன் பின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் சிம்பு, 20 வயது இளைஞனாக சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். ஒரு கிராமத்து இளைஞனாக மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என பலரும் பாராட்டினர்.

Pathu Thala

Pathu Thala

“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு “பத்து தல” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் மார்ச் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் “பத்து தல” திரைப்படத்தை தொடர்ந்து இதுவரை எந்த திரைப்படத்திலும் சிம்பு ஒப்பந்தமாகவில்லை. “பத்து தல” திரைப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் இன்னும் தனது அடுத்த திரைப்படத்தை குறித்தான முடிவை எடுக்காமல் இருக்கிறார் சிம்பு.

Chitra Lakshmanan

Chitra Lakshmanan

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தனது வீடியோ ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அதில் “ரஜினிகாந்த, கமல்ஹாசன், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுடைய அடுத்த படம் என்ன என்பது குறித்து மிகச் சரியாக திட்டமிடுகிறார்கள். ஆனால் இரண்டாம் நிலை நடிகர்களிடையே இந்த திட்டம் சரியாக இல்லை என்று நினைக்கிறேன். அப்படி ஒரு நிலையில்தான் சிம்புவும் இருக்கிறார்” என கூறிய அவர் “சிம்பு பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த நேரம் அவரது அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியிருக்கவேண்டாமா? ஏன் அவர் அதனை திட்டமிட முடியாமல் இருக்கிறார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரே ஒரு ஷங்கர் படம்தான்… மொத்த தயாரிப்பு நிறுவனமும் குளோஸ்… அடக்கொடுமையே!

Next Story