Cinema News
சிம்புவுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷா?.. தீபிகா படுகோனா?.. கமல் தயாரிக்கும் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!
Published on
By
சிம்பு நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தீபிகா படுகோனே & கீர்த்தி சுரேஷ் இருவரிடமும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார். 1.4 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.
தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார்.
தெலுங்கில் ‘மகாநடி’ என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.
சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி, தசரா படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், போலோ ஷங்கர், உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார். கீர்த்தி சுரேஷ், தற்போது ரிவால்வர் ரீட்டா என்ற புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் கமல் ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால் தீபிகா படுகோனே இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.
Actor sarathkumar : திரைப்பட வினியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைந்தவர் சரத்குமார். ஆனால், அது கிளிக் ஆகாமல் போகவே நடிகராக...
மகேஷ் பாபுவின் ஒக்கடு, போக்கிரி படங்களை ரீமேக் செய்து தமிழில் முன்னணி நடிகராக மாறி விஜய்க்கு இயக்குநர் அட்லி எல்லாம் புதுப்...
ஆர்ஆர்ஆர் பார்த்துட்டு என்னை ஹாலிவுட்டுக்கு கூப்பிட்டாங்கன்னு போகாம ஷங்கரை நம்பி பல ஆண்டுகளை வீணடித்து விட்டார் ராம்சரண் என அவரது ரசிகர்கள்...
ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமே இசையமைப்பாளர் அனிருத் தான். இசை சேர்ப்பதற்கு முன்னதாக ஜெயிலர் திரைப்படம் அபவ்...
தமிழ் சினிமாவின் இளைய தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்....