16 வருஷமா சிம்பு மேல செம லவ்வு!....பகீர் கிளப்பும் இன்னோரு சீரியல் நடிகை.....

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிம்பு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். இவருக்கு அப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்ததோ. அதே அளவிற்கு இப்போதும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது பல சினிமா பிரபலங்களும் சிம்புவுக்கு தான் மிகப்பெரிய ரசிககை என தெரிவிப்பது உண்டு.
அந்த வகையில், கடந்த சில மாதங்களாக சீரியல் நடிகை ஸ்ரீநிதி சிம்புவை காதலிக்கிறேன், அவரைத்தான் நான் திருமணம் செய்துகொள்வேன் என பேசி சிம்பிவின் வீட்டு வாசலிலே நின்று கொண்டு பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார்.
இதையும் படியுங்களேன்- தயவு செஞ்சி என்ன தொந்தரவு பண்ணாதீங்க.! தனுஷ் எடுத்த அதிரடி முடிவு.?
இந்நிலையில், ஸ்ரீநிதியை தொடர்ந்து தற்போது இன்னொரு சீரியல் நடிகை 16 வருடமாக சிம்புவை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சாய் காயத்ரியின் தங்கையும், நடிகையுமான மதுரா தான்.
மதுராவும் சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு பேட்டியில் சிம்பு குறித்து பேசியுள்ளார். அதில் தான் பள்ளியில் படத்திக்கொண்டிருந்த போது, சன் மியூசிக் சேனலில் சிம்புவின் "தம்" படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பார்த்தாரம்.
அந்த பாடலை பார்த்ததிலிருந்து இப்போது வரை கிட்டத்தட்ட 16 வருடங்களாக சிம்புவை ஒரு தலயாக காதலித்து வருவதாகவும், அவரை நேரில் பார்த்தால் கண்டிப்பாக காதலை சொல்லிவிவிடுவேன்" என கூறியுள்ளார். ஏற்கனவே ஸ்ரீ நிதி சிம்புவை காதலிப்பதாக கூறியிருந்த நிலையில், மதுராவும் இப்படி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.