கனவுக்கன்னி சில்க் ஸ்மிதா இவ்வளவு உதவிகள் செய்திருக்காரா?!.. அட ஆச்சர்யமா இருக்கே..

by sankaran v |   ( Updated:2023-12-06 06:06:18  )
silk23
X

silk23

தமிழ்த்திரை உலகில் 80களில் இவர் நடிக்காத படங்களே இல்லை என்று சொல்லும் நிலை இருந்தது. இவரது கால்ஷீட் கிடைக்க வேண்டுமே என முன்னணி நடிகர்களும் காத்திருந்த காலம் உண்டு. தயாரிப்பாளர்களை எடுத்துக்கொண்டால் இவரது கால்ஷீட் இருக்கிறதா என்று உறுதி யெ்து கொள்வார்களாம். அதன்பிறகுதான் படத்தையே எடுக்க ஆரம்பிப்பார்களாம்.

வண்டிச்சக்கரத்தில் உருண்ட இவரது வாழ்க்கை, மூன்று முகம், அமரன், அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, சகலகலா வல்லவன், பாயும்புலி, ரங்கா என இவர் நடிப்பில் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டது.

silk2

silk2

சில்க் ஸ்மிதாவின் அடையாளங்கள் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது கிறங்கடிக்கும் கண்கள் தான். அதே நேரம் அவரது வாளிப்பான உடல் அழகும் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தி விடும். சில்க் திரையில் வந்தாலே ரசிகர்களுக்கு ஒரு இனம்புரியாத கிளுகிளுப்பு உண்டாகி விடும். இப்படியாக சில்க்குக்கு நாளுக்கு நாள் புகழ் குவிந்து கொண்டே இருந்தது. அதே வேளையில் பணமும் குவிந்தது.

இதையும் படிங்க: என்ன இருந்தாலும் இப்படி நடந்திருக்கக் கூடாது! சிவாஜியை காப்பாற்றப் போய் மாட்டிக் கொண்ட சில்க்!

சொல்லப்போனால் ஹீரோயின்களுக்கு சமமான தொகையை சில்க் சம்பளமாக வாங்கினாராம். பணம் எவ்வளவு தான் வந்தாலும் அவரிடம் இருந்த இளகிய மனசும், இரக்கக்குணமும் அவரது புகழை மேலும் மேலும் பெருகச் செய்தன.

தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் திரையுலக தொழிலாளர்களுக்கும், ஏழைகளுக்கும் தர்மம் செய்தார். பண்ணையார்களுக்கு எதிராகப் போராடிய ஆந்திராவில் உள்ள மக்களுக்கும் இப்படி நிவாரண நிதியை வாரி வழங்கினாராம் சில்க். உதவின்னு யார் கேட்டாலும் தயங்காமல் செய்து விடும் மனம் படைத்தவர்.

silk

silk

திரையுலகில் சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம். 96ல் இவர் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு வதந்தி காட்டுத்தீயாகப் பரவியது. இந்த செய்தியால் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. ஆனால் அது வதந்தியாக இருக்கக்கூடாதா என ஏங்கிய மக்களுக்கு பின்னர் தான் தெரிந்தது உண்மை என்று.

அபார நடனத்திறன், வசீகரிக்கும் கண்கள், குணச்சித்திர வேடங்கள் என தமிழ்த்திரை உலகில் இவர் வந்து போன படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். ரசிகர்கள் இவரை கனவுக்கன்னி என்று செல்லமாக அழைத்தனர். சின்ன விஷயம் என்றாலும் எமோஷனலாகி விடுவாராம் சில்க். இவருக்கு என்ன தேவை என்பதே கடைசி வரை தெரியவில்லையாம்.

இதையும் படிங்க: சில்க் ஸ்மிதாவையே மிஞ்சிய பத்மினி! இப்படியெல்லாம் நடிச்சிருந்தாங்களா? முகத்திரையை கிழித்த பிரபலம்

Next Story