வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?.. தன்னுடன் ஆட வந்த நம்பியாரிடம் வாய்க்கொழுப்பை காட்டிய சில்க்.. சும்மா இருப்பாரா?..

by Rohini |
silk
X

silk

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜிக்கு எப்பேற்பட்ட மதிப்பும் மரியாதையும் இருந்து வந்ததோ அதே அளவுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் பிரபலமான நம்பியாருக்கும் அதே அளவு மரியாதையை கொடுத்து வந்தது தமிழ் சினிமா. எம்ஜிஆருக்கு ஆன் ஸ்கீரில் பெஸ்ட் வில்லனே நம்பியார் தான்.

மிரட்டிய நம்பியார்

இருவரும் மோதும் காட்சிகள் காண்போரை திக் திக் நிமிடங்களில் திகைக்க வைக்கும். நம்பியாரின் கணீர் குரலும் மிரட்டும் தோணியும் அவர் நடிக்கும் போது ஒரு வித பாவனையுடன் நடிப்பார். அதுவே பார்ப்போரை மிரள வைக்கும். சினிமாவில் எந்த அளவுக்கு தன் வில்லத்தனத்தை காட்டினாரோ அதே அளவுக்கு எதிர்மறையானவர் அவரது சொந்த வாழ்க்கையில்.

silk1

nambiar

எந்த குடிப்பழக்கமும் கெட்டப்பழக்கமும் இல்லாத உன்னத மனிதர் நம்பியார். ஐயப்பனின் தீவிர பக்தரான நம்பியாரை அனைவரும் சாமி என்றே தான் அழைப்பார்கள். தனது சினிமா பயணத்தை தன் அடுத்தக் கட்டத்திற்கும் நகர்த்திக் கொண்டு போனார்.

தொடர் பயணம்

ரஜினி,கமல்,பிரபு,சத்யராஜ், சரத்குமார் ,விஜய்,அஜித் என அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் தன் பயணத்தை தொடர்ந்தார். இந்த நிலையில் நம்பியாரிடம் தனது வாய்க் கொழுப்பை காட்டிய சில்கை பற்றி பிரபல டான்ஸ் மாஸ்டரான புலியூர் சரோஜா ஒரு தகவலை பகிர்ந்தார்.

silk22

silk

அதாவது பிரபு நடித்த படத்தில் சில்க் ஒர் பாடல் ஆடுவது போன்ற காட்சியாம். அந்தப் பாடலில் கூடவே நம்பியாரும் ஒரு ஸ்டெப் ஆடுவாராம். அந்தப் பாடல் காட்சியை படமாக்க செட்டிற்கு அனைவரும் வந்திருக்கின்றனர். அப்போது நம்பியாரை பார்த்து புலியூர் சரோஜாவிடம் அது யார் என்று சில்க் கேட்டாராம். உடனே புலியூர் சரோஜா ‘அட மண்டு, அவர் தான் நம்பியார், சீனியர் நடிகர், ஏன் உனக்கு தெரியாதா?’ எனக் கேட்டாராம்.சில்கும் தெரியாது என சொல்லியிருக்கிறார்.

இப்படியுமா பேசுவாங்க?

சொன்னது மட்டுமில்லை, வயசான காலத்துல இதெல்லாம் தேவையா அவருக்கு? பேசாமல் வீட்ல கிடக்க வேண்டியது தானே? என்றும் சொல்லியிருக்கிறார் சில்க். பக்கத்தில் தான் நம்பியாரும் இருந்தாராம். இதைக் கேட்ட புலியூர் சரோஜா ஓடிப்போய் நம்பியாரிடம் ‘சாமி,அது ஒரு லூசு, அவ பேசுனத எதும் மனசுல வச்சுக்காதீங்க’ என்று சொன்னாராம்.

silk3

silk3

அதற்கு நம்பியார் ‘இருக்கட்டும்மா, நீ தான் சொல்றீல , பாத்துக்கிறேன்’ என்று மிகவும் சாதுவாக சொல்லியிருக்கிறார். மேலும் சில்கிடமும் புலியூர் சரோஜா ‘உன் வாய் சவடாலை எல்லாம் அவர்கிட்ட காட்டாதே, அவருடன் ஆடும் போது ஒழுங்கா ஆடு, எதாவது செஞ்சா நான் உனக்கு எதுமே எந்தப் படத்திற்குமே மாஸ்டராக வரமாட்டேன்’ என்று சொல்லிவிட்டாராம். அதன் பின் சில்க் நம்பியாருடன் ஆடும் காட்சியில் ஒழுங்காக நடித்துக் கொடுத்தாராம். இந்த சுவாரஸ்ய தகவலை புலியூர் சரோஜா ஒரு பேட்டியின் போது கூறினார்.

Next Story