டி.எம்.எஸ் பாட!..சிலுக்கு ஆட!.. பிரமாதம் போங்க!. உற்சாகத்தில் சிலுக்கு செஞ்ச விஷயம்தான் ஹைலைட்!..

by Rohini |
silk
X

silk smitha tms

தமிழ் சினிமாவில் 80களில் கனவுக்கன்னியாக இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட இளங்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவரின் கவர்ச்சி நடனத்தால் ஒட்டுமொத்த திரையுலகமே இவரின் வீட்டு வாசற்படியில் காத்திருந்த காலம் அது. ஹீரோ, ஹீரோயின் கால்ஷீட்டிற்காக காத்துக் கொண்டிருந்த காலம் போய் சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தான் அப்போதைய தமிழ் சினிமா இருந்தது.

நடிப்பது ஒரு பாடலுக்கு என்றாலும் அந்த ஒரு பாடலுக்கே தயாரிப்பாளர்கள் தவமிருந்தனர். இவரின் ஆட்டத்திற்காகவே பல படங்கள் ஓடியிருக்கின்றன. ரசிகர்கள் வந்து குவிந்தனர்.இப்படி பட்ட சில்க் ஸ்மிதா பொது மேடையில் ஆடுவதை முழுவதுமாக தவிர்த்து வந்தார்.

silk1

silk1

ஒரு சமயம் மதுரா டிராவல்ஸ் அதிபரான விகேடி.பாலன் அந்த நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வதை தொழிலாக செய்து வந்தார். அப்போது சினிமாவில் இருந்து பல கலைஞர்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி கலை நிகழ்சிகள் செய்துகொண்டு வந்தார். அப்போது ஒரு சமயம் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு தமிழக கலைஞர்கள் பலரும் செல்ல தயாராக இருந்தனர். அப்போது சில்க் மிகவும் பிரபலம் என்பதால் அவர் வந்தால் இன்னும் மார்கெட் உயரும் என நினைத்திருக்கிறார் பாலன்.

அப்போது சில்க் ஸ்மிதாவின் கணவரான ராதா கிருஷ்ணனிடம் பேசியிருக்கிறார். அவரும் வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறார். சில்க் வீட்டிற்கு போனவர் வெளி நாட்டில் சில்கை கலை நிகழ்ச்சிக்கு அனுப்புவது பாதுகாப்பாக இருக்குமா என்று யோசித்து அதன் பிறகு ஒப்புக் கொண்டிருக்கிறார். சில்கும் வர சம்மதித்து விட்டாராம்.உடனே அதற்கான சம்பளமாக 8000 ரூபாயையும் கொடுத்திருக்கிறார்.

silk2

silk2

இன்னொரு பக்கம் டி.எம்.எஸின் கலை நிகழ்ச்சியும் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். ஒரே மேடையில் டி.எம்.எஸையும் சில்கையும் பார்க்க ரசிகர்கள் ஆசைப்பட டி.எம்.எஸ் ‘கேட்டுக்கோடி உருமி மேளம்’ மற்றும் ‘என்னடி ராக்கம்மா பல்லாக்கு’ போன்ற பாடல்களை பாட ஓடி வந்து ஆடினாராம் சில்க். இதை பார்த்ததும் அரங்கமே சிலிர்த்து போய்விட்டதாம். டி.எம்.எஸும் பாடிக் கொண்டே ஆடியிருக்கிறார்.

அதை முடித்து விட்டு பிரான்ஸிலும் கலை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சில்க் தமிழ் நாட்டுக்கு திரும்பியர் உடனே விகேடி பாலனை அழைத்திருக்கிறார். வந்தவரிடம் அவர் கொடுத்த சம்பளமான 8000 ரூபாயை அவரிடமே கொடுத்தாராம். ஏனெனில் வெளி நாடுகளில் சில்கிற்கு கிடைத்த மரியாதை , பரிசு, அன்பளிப்பு இதிலேயே அவர் நனைந்து விட்டதாக இந்தப் பணத்தை பாலனிடமே கொடுத்திருக்கிறார்.

silk3

silk3

ஆனால் இவர் வாங்க மறுக்க சில்க் வீட்டிற்கு வெளியே 4 கார்கள் இருந்ததாம். அதில் ஒன்று வெட்டியாகத்தான் இருக்கிறது, அதையாவது வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாராம். ஆனால் அதுவும் வேண்டாம் என சொல்லிவிட்டாராம் பாலன். மேலும் சில்கை பற்றி மேலும் கூறிய பாலன் டாக்டர் ராஜ சேகர் ஏற்கெனவே திருமணமாகி முதல் மனைவியை விட்டு இரண்டு குழந்தைகளுடன் சில்க் உடன் தான் வசித்து வந்தாராம். அந்த இரண்டு பிள்ளைகளையும் நல்ல நிலைமைக்கு ஆளாக்கியதே சில்க் தானாம். இதை எல்லாவற்றையும் பாலன் ஒரு பேட்டியில் கூறினார்.

Next Story