சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு நடித்த நடிகை... காட்சியைக் கட் செய்ய போட்ட டீலிங்...!

by sankaran v |   ( Updated:2024-08-27 09:53:27  )
silk
X

silk

நடிகை பிரியங்கா அருள் மோகன் முதலில் சினிமா வாய்ப்புத் தேடி அலைந்த போது அவருக்கு டிக் டாக் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அதில் நெருக்கமான படுக்கை அறைக் காட்சிகளில் நடித்து இருந்தார். அந்தப் படத்தின் இயக்குனர் மதன்குமார் ஒரு புதுமுகம்.

அப்போது சில நிதிநெருக்கடி காரணங்களால் அந்தப் படம் வெளியாக சற்று சிரமமாக இருந்ததாம். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் மூலமாக வாய்ப்பு கிடைத்ததாம். அதன்பிறகு டான் படத்திலும் அவர் தான் ஜோடி. டாக்டர் படம் பிக்கப் ஆனார். அதன்பிறகு அவர் டாப் ஹீரோயினானதும் 2023 டிசம்பரில் தான் படம் வெளியானதாம்.

அந்தப் படம் வெளிவரும் தகவல் அறிந்ததும் பிரியங்கா அந்த பட டைரக்டரிடம் பேசினாராம். அந்த செக்சியான படுக்கை அறைக் காட்சிகளைத் தூக்கச் சொல்லி திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச வேண்டிய முறையில் பேசி தூக்க வைத்தாராம். இது அந்தப் படக்குழுவினருக்கே தெரியாதாம்.

Also read: குஷி படத்தை பற்றி பேசி வசமா மாட்டிக்கிட்ட பிரியங்கா மோகன்! கோலிவுட்டில் இனி அவ்ளோதான்

டைரக்டர் மதன்குமார் படம் வெளியானதும் நொந்து போய் பிரஸ் மீட் வைத்தாராம். அவர் பிரியங்காவை நேரடியாகக் குற்றம்சாட்டவில்லை. ஆனால் நாங்க கொடுக்கும்போது இருந்த படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் கட் பண்ணியிருக்காங்க. தியேட்டர்காரங்கக் கிட்ட கேட்டா அது டெக்னிகல் பால்ட்னு கூலா சொல்றாங்க.

Priyanka arul mohan

Priyanka arul mohan

பத்திரிகைகாரங்க பிரியங்கா தான் இதுக்குக் காரணமான்னு கேட்டதுக்கு அதை நேரடியா சொல்ல விரும்பலன்னு சொல்லிவிட்டாராம் இயக்குனர். தயாரிப்பாளர் நொந்து போய் பிரஸ்மீட்டுக்குக் கூட வரலையாம். அந்த 20 நிமிடக் காட்சிகளை நீக்கியதும் கதையே புரியாமல் போய்விட்டதாம். அதுதான் கதைக்கே அவசியம் என்கிறார்கள். அதனால் படம் 3 நாள் தான் ஓடியதாம்.

தயாரிப்பாளர் கவுன்சில்ல புகார் கொடுத்துருக்காங்க. பிரஸ்மீட் வச்சிருக்காங்க. அதுல எடிட்டர் கலந்து கொள்ளவில்லை. அதற்கு காரணம் பிரியங்காவுடன் ஏற்பட்ட பர்சனல் டீலிங் என்றும் சொல்கிறார்கள்.

அதுகுறித்த பிரச்சனையும் நீதிமன்றத்தில் போய்க்கொண்டு இருக்கிறதாம். படத்தில் சில்க் ரேஞ்சுக்கு பிரியங்கா நடித்திருந்தாராம். இதைப் படம் ரிலீஸாவதற்கு முன்னரே பார்த்தவங்க சொன்ன தகவல் என்றும் சொல்லப்படுகிறது. டைரக்டர் நெல்சனுடன் இணைத்துப் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தில் 'காவாலா' பாடலுக்கு முதலில் நெல்சன் பிரியங்காவைத் தான் அழைத்தாராம். ஆனா இப்போ வேணாம். கொஞ்ச காலம் போகட்டும்னு பிரியங்கா தான் தவிர்த்து விட்டாராம்.

மேற்கண்ட தகவலை பிரபல சினிமா பத்திரிகையாளர் வித்தகன் தெரிவித்துள்ளார்.

Next Story