
Cinema News
தற்கொலையும் அல்ல., கொலையும் அல்ல.! சில்க் ஸ்மிதா மரணத்தின் மர்மங்கள்.,
தமிழ் சினிமாவில் சிலரது தாக்கம் அவர்கள் இறந்து எத்தனை வருடங்கள் ஆனாலும், அவர்கள் பெயர் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும். அப்படி நிலைத்து நிற்கும் பெயர்கள் பெரும்பாலும் கதாநாயகர்களாக தான் இருப்ப்பார்கள். ஆனால், ஒரு கனவு நாயகியாக தற்போதும் பேசப்படுபவர் சில்க் ஸ்மிதா.
இவர் வந்த பின்னர் தான் அந்த ஐட்டம் சாங், குத்துப்பாட்டு என படங்களில் அதிகளவில் வர தொடங்கியது என்றே கூறலாம். அந்த அளவுக்கு தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்தவர் சில்க் ஸ்மிதா.
எந்தளவுக்கு விரைவில் புகழின் உச்சிக்கு சென்றாரோ அதே வேகத்தில் விரைவில் இறைவனடி சென்று விட்டார். தனது 35 வயதிலேயே அவர் உயிரிழந்து விட்டார். அவருடைய மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருந்தன. அது கொலை என சிலரும் தற்கொலை என சிலரும் பலரும் தங்கள் கருத்துக்களை அப்போது கூறி கொண்டனர்.
இதையும் படியுங்களேன் – தற்கொலையும் அல்ல., கொலையும் அல்ல.! சில்க் ஸ்மிதா மரணத்தின் மர்மங்கள்.,
இந்த விவகாரம் பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய நபரும், அவரது டப்பிங் ஆர்டிஸ்டுமான ஹேமா மாலினி கூறுகையில், ‘சில்க் ஸ்மிதா மரணம், தற்கொலையும் அல்ல, கொலையும் அல்ல அது ஒரு எதிர்பாரா விபத்து. ஒருவரை குடிபோதையில் வேகமாக அடித்தால் அவர் இறந்துவிடுவார் தெரியுமா. அது போல தான் அந்த இடத்தில் எதோ நடந்துள்ளது. அப்படி செய்தவர்கள் தப்பிக்க நினைத்து தான் மின் விசிறியில் தூக்கிட்டது போல் ஏற்பாடு செய்துவிட்டார்கள் போலும். ‘ என அவர் கூறினார்.