ரூம் கூட இல்லாம அவதிப்பட்ட சில்க் சுமிதா...அதுக்கு கூட சேலையத்தான் யூஸ் பண்ணாராம்...
80 களில் தன் கவர்ச்சியால் அனைவரையும் கதிகலங்க வைத்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன் அறிமுகத்தை உறுதி செய்தார் சில்க் ஸ்மிதா. எத்தனையோ முன்னனி நடிகைகள் அந்த காலங்களில் இருந்தாலும் அவர்கள் படத்திற்காக சில்க் ஸ்மிதா கால்ஷீட்டுக்காக அவரின் வீட்டு வாசல்படியில் காத்திருந்த இயக்குனர்கள் ஏராளம்.
நடிப்பது ஒரு பாட்டு என்றாலும் அது சில்க் ஸ்மிதா தான் இருக்க வேண்டும் என தவம் கிடந்திருக்கின்றனர். அந்த அளவுக்கு தன் கவர்ச்சியாலும் காந்த பார்வையாலும் அனைவரையும் சொக்க வைத்தவர். நடிகைகளுக்கே மிகவும் பிடித்த நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. இப்படி இருக்கையில் நடிகை சில்க் ஸ்மிதா ஒரு சமயம் ரூம் இல்லாமல் அவதி பட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
இதையும் படிங்கள் : தள்ளாடுற வயசுல கண்டீசன பாத்தீங்களா...! அடம்பிடிக்கும் கவுண்டமணி...
அந்த நேரங்களில் கேரவன் கிடையாதாம். மிகவும் கஷ்டப்பட்டு தான் நடித்திருக்கின்றனர். அப்படி ஒரு படப்பிடிப்பில் சில்க் ஸ்மிதா இயற்கை உபாதையை கழிக்க இடம் தேடியிருக்கிறார். அந்த இடத்தில் ரூம் கூட தயார் செய்து தர முடியாத நிலைமையாம். அப்போது படப்பிடிப்பில் இருந்தவர்கள் நாங்கள் சுற்றி சேலையை பிடித்துக் கொள்கிறோம்.
இதையும் படிங்கள் : பேச்சுல தெளிவு...! அப்புறம் எப்படி நெருங்க முடியும்...? நடிகை ரேகாநாயர் அதிரடி பேட்டி...
நீங்கள் உங்கள் இயற்கை உபாதையை கழித்துக் கொள்ளுங்கள் என்று கூற அவரும் சரி என சம்மதம் சொல்ல திடீரென மேலே பார்த்தாராம். பக்கத்தில் இருந்த தென்னை மரத்தின் உச்சியில் ஏறிக் கொண்டு சில்க் ஸ்மிதாவை பார்த்துக் கொண்டிருந்தாராம். இதை பார்த்த சில்க் உடனே படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சொல்லமுடியாத வலியால் ஓ...னு அழுது விட்டாராம். இப்படி பல கஷ்டங்களுக்கு இடையே மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார் நடிகை சில்க் ஸ்மிதா. இதை வலைபேச்சு அந்தனனன் தெரிவித்தார்.