1984 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், அம்பிகா, பாண்டியன், ஜெய்சங்கர், ரவீந்திரன், சில்க் ஸ்மிதா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “வாழ்க்கை”. இத்திரைப்படத்தை சி.வி.ராஜேந்திரன் இயக்கியிருந்தார். சித்ரா லட்சுமணன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இளையராஜா
“வாழ்க்கை” திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இளையராஜாவின் இசை இருந்தது. இத்திரைப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள். இந்த ஆறு பாடல்களுமே வேற லெவலில் ஹிட் ஆகியது. குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மெல்ல மெல்ல” என்ற பாடல் இப்போதும் மிக பிரபலமான பாடலாக அறியப்படுகிறது.
கவர்ச்சி கன்னி
இந்தியாவின் கவர்ச்சி கன்னியாக விளங்கிய சில்க் ஸ்மிதா 80களில் பல திரைப்படங்களில் அழகு பதுமையாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார். சில்க் ஸ்மிதாவை அனுதினமும் நினைத்து நினைத்து ஏங்கும் ஒரு பெரும் ரசிகர் கூட்டமே உருவாகி இருந்தது.
வாழ்க்கை திரைப்படத்தில் இடம்பெற்ற “மெல்ல மெல்ல” பாடலில் இளமை ததும்ப ததும்ப நடனமாடி இளைஞர்களை கவர்ந்திழுத்தார். சில்க் ஸ்மிதா வளைந்து வளைந்து ஆடும் நடனத்தின் அழகில் பார்வையாளர்கள் சொக்கிப்போயினர்.
சில்க்கை கீழே போட்ட நடிகர்
‘மெல்ல மெல்ல” என்ற பாடலில் ரவீந்திரன், சில்க் ஸ்மிதாவை தலை மேல் தூக்கி வைத்து ஆடுவது போல் ஒரு நடனகாட்சி இடம்பெற்றிருந்தது. அப்போது தவறுதலாக ரவீந்திரனின் கை நழுவியதால் சில்க் ஸ்மிதா கீழே விழுந்துவிட்டாராம். உடனே சில்க் ஸ்மிதா கோவித்துக்கொண்டு இந்த படத்தில் இனி நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாராம்.
சில்க்கிடம் கெஞ்சிய தயாரிப்பாளர்
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் அப்போது வெளியூரில் இருந்தாராம். சில்க் ஸ்மிதா கோபித்துக்கொண்ட செய்தி அவருக்கு தெரியவர, அதற்கு அடுத்த நாள் சில்க் ஸ்மிதாவின் வீட்டிற்கே சென்றுவிட்டாராம்.
அங்கே ஸ்மிதாவை படப்பிடிப்பிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சில்க் ஸ்மிதா “நான் இனிமேல் ரவீந்திரனோடு நடிக்க மாட்டேன். அவர் என்னை வேண்டுமென்றே கிழே போட்டு விட்டார்” என கூறினாராம். அதற்கு சித்ரா லட்சுமணன் “என்ன இப்படி பேசுற? இத்தனை நாள் அவருடன் நடித்திருக்கிறாய். ரவீந்திரன் என்ன அப்படிப்பட்ட ஆளா?” என்று அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும் சில்க் ஸ்மிதா சமாதனாமாகவில்லை.
இதையும் படிங்க: “இவனை கழுத்த பிடிச்சு வெளிய தள்ளு”… வாயை கொடுத்து புண்ணாக்கிக்கொண்ட தம்பி ராமையா…
அதன் பின் “சரி, உனக்கு ரவீந்திரனுடன் நடிக்க விருப்பமில்லை என்றால் இனி வரும் திரைப்படங்களில் அவருடன் நடிக்காதே. அது உன் இஷ்டம். ஆனால் இந்த படத்தை நாம் முடித்தாகவேண்டும். நீ இடம்பெற்ற 90 சதவிகித காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டது. இப்போது வந்து நடிக்க முடியாது என கூறினால் என்ன அர்த்தம்” என கேட்டாராம்.
சித்ரா லட்சுமணனும் சில்க் ஸ்மிதாவும் நெருங்கிய நண்பர்கள். ஆதலால் அந்த நட்பின் காரணமாக சில்க் ஸ்மிதா “வாழ்க்கை” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்தாராம்.
தமிழ் சினிமாவில்…
Sun Tv:…
பிரபல குணச்சித்திர…
Jyothika: கங்குவா…
Surya 44:…