Categories: Cinema History latest news

ஆர்க்கெஸ்ட்ராவில் பாட்டு பாடும் சில்க் ஸ்மிதா.. அரிய வீடியோ……

80களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. ரஜினி, கமல் நடிக்கும் படங்களில் கூட படத்தின் வெற்றிக்காக இவரின் கவர்ச்சி பாடல் ஒன்று இடம் பெற்றிருக்கும். சின்ன சின்ன வேடங்களில் நடித்தும் இருக்கிறார். பிரபுவுக்கு ஜோடியாக சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இவரின் போதையேத்தும் கண்கள், கவர்ச்சி ஆகியவை ரசிகர்களை சுண்டி இழுத்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து மேடையில் அவர் ‘சுராங்கனி சுராங்கனி’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மேடையில் ஏறி நடனம் ஆகும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

Published by
சிவா