சிலுக்கின் தற்கொலைக்கு காரணமாக இருந்த தகாத உறவு!.. பகீர் தகவலை பகிர்ந்த இயக்குனர்..
1980களில் இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இப்போதும் கூட சில்க் ஸ்மிதாவுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சில்க் ஸ்மிதா டாப் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார்.
சில்க் ஸ்மிதா ராதாகிருஷ்ணன் என்ற மருத்துவரை காதலித்து வந்தார் என்று சினிமா வட்டாரங்களில் ஒரு பேச்சு உண்டு. இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக முடிவெடுத்ததாக கூட கூறுவார்கள். ஆனால் இந்த வேளையில் சில்க் ஸ்மிதா சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சில்க் ஸ்மிதாவின் தற்கொலை தமிழ் சினிமா உலகையே அதிரவைத்தது. அவர் தற்கொலை செய்து கொண்டு பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அவர் தற்கொலை செய்துகொண்ட காரணத்தை குறித்த தெளிவான தகவல் இப்போது வரை புலப்படவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான வேலு பிரபாகரன், சில்க் ஸ்மிதா குறித்து பலரும் அறியாத தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
சில்க் ஸ்மிதா ராதாகிருஷ்ணன் என்ற டாக்டரை காதலித்து வந்தார் என்ற தகவலை நாம் முன்பே பார்த்திருப்போம். இவர் ஒரு வயதானவர் என்று கூறப்படுகிறது.
ராதாகிருஷ்ணன் குதிரை ரேஸில் பந்தயம் கட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருப்பாராம். ஆதலால் பல லட்சங்களை அவர் இழந்தாராம். சில்க் ஸ்மிதா எவ்வளவோ சொல்லியும் ராதாகிருஷ்ணன் கேட்கவில்லையாம். இவ்வாறு ஒரு தகவலை வேலு பிரபாகரன் அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதே போல் ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா ராதாகிருஷ்ணனின் மகனையே காதலித்தாராம். இது மிகப்பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டதாம். சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வேலு பிரபாகரனிடம் தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாகவும் கூறியிருக்கிறார். இவ்வாறான பகீர் தகவல்களை தனது பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் வேலு பிரபாகரன்.
இதையும் படிங்க: சின்னதா வீடு கட்டுறதுதான் உயிருக்கு நல்லது.. பாரதிராஜாவுக்கு சிவாஜி கொடுத்த அட்வைஸ்…