அவர் வர வரைக்கும் போகமாட்டேன்!. நடுரோட்டில் தர்ணா செய்த சிலுக்கு.. அவ்வளவு நெருக்கமா?!..
1980களில் தென்னிந்தியாவின் கவர்ச்சி புயலாக வலம் வந்த சில்க் ஸ்மிதா, 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்த உண்மையான தகவல் இப்போது வரை மர்மமாகவே உள்ளது.
சில்க் ஸ்மிதா உச்ச நடிகையாக வலம் வந்தபோது ராதாகிருஷ்ணன் என்ற மருத்துவரை காதலித்து வந்ததாக அவருடன் நட்பாக இருந்த பலரும் கூறுவார்கள். அதே நேரத்தில் பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளராக இருந்த வேலு பிரபாகரனிடம் சில்க் ஸ்மிதா நெருக்கமாக பழகியுள்ளார். இது குறித்து வேலு பிரபாகரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது சில்க் ஸ்மிதா ராதாகிருஷ்ணனை காதலித்து வந்த சமயத்தில் நடுவில் இருவருக்குள்ளும் ஒரு சிறிய விரிசல் நேர்ந்ததாம். இந்த விரிசல் விழுந்த இடைப்பட்ட காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா வேலு பிரபாகரனையும் காதலித்து வந்தாராம்.
வேலு பிரபாகரன் ஏற்கனவே இயக்குனர் ஜெயதேவியை காதலித்து வந்தார். அந்த சமயத்தில் சில்க் ஸ்மிதாவிடமும் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு நாள் மாலை 4 மணிக்கு ஒரு இடத்தில் சந்திப்போம் என வேலு பிரபாகரன் கூறியுள்ளார். அன்று 4 மணி அளவில் சில்க் ஸ்மிதா அந்த இடத்திற்கு காரில் சென்று அங்கே இவருக்காக காத்திருந்தாராம்.
வேலு பிரபாகரனால் சரியாக 4 மணிக்கு வரமுடியாத சூழல். ஆதலால் தனது நண்பர் மகேஷ் என்பவருக்கு தொடர்பு கொண்டு “சில்க் ஸ்மிதா எனக்காக ஒரு இடத்தில் காத்திருக்கிறார். அவரை அழைத்து வந்து உன் வீட்டில் இருக்கவை. நான் வந்துவிடுகிறேன்” என கூறினாராம்.
உடனே மகேஷ் வேகமாக சில்க் ஸ்மிதா காத்திருக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார். அங்கே சில்க் ஸ்மிதாவை சுற்றி கூட்டம் கூட்டமாக மக்கள் நின்றுகொண்டிருந்தார்களாம். கூட்டத்தை விலக்கிக்கொண்டு பார்த்தால் சில்க் ஸ்மிதா கார் பேன்னட்டின் மேல் உட்கார்ந்திருந்தாராம்.
மகேஷ் விவரத்தை கூறி சில்க் ஸ்மிதாவை அழைத்திருக்கிறார். ஆனால் சில்க் ஸ்மிதா தான் வேலு பிரபாகரன் வரும் வரை இங்கேயேதான் இருக்கப்போவதாகவும் அதுவும் கார் பேன்னட்டின் மேல்தான் உட்கார்ந்திருக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார். அதன் பின் 4.45 மணி வாக்கில் வேலு பிரபாகரன் அந்த இடத்திற்கு வந்துவிட்டாராம். இவ்வாறு வேலு பிரபாகரனுக்காக சில்க் ஸ்மிதா பொதுவெளியில் வெகு நேரம் காத்திருந்திருக்கிறார்.