பிரபல டான்ஸ் மாஸ்டரின் மகனின் மீது ஆசைப்பட்ட சில்க் ஸ்மிதா… ஆனால் இதில் சோகம் என்னன்னா??

Silk Smitha
சில்க் ஸ்மிதா
1980 காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக கொடிகட்டி பறந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் 1980 ஆம் வெளிவந்த “வண்டிச்சக்கரம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவர்.
இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் அழகு பதுமையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா, தனது கட்டழகாலும், காந்த கண்களாலும் ரசிகர்களை கவிழ்த்துப்போட்டார். இவர் ஒரு டாக்டரை காதலித்து வந்ததாக பலரும் கூறினார்கள்.

Silk Smitha
அவரையே திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வந்தது. ஆனால் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் சில்க் ஸ்மிதா. இப்போது வரை அவரது மரணம் மர்மமாகவேதான் இருக்கிறது.
உங்க பையனை கட்டிக்கொடுங்க
இந்த நிலையில் பழம்பெரும் நடன இயக்குனராக திகழ்ந்த புலியூர் சரோஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது சில்க் ஸ்மிதா குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை அதில் கூறியுள்ளார்.
அதாவது சில்க் ஸ்மிதா, புலியூர் சரோஜா மீது மிகுந்த பாசமாக இருப்பாராம். தனது சொந்த அக்காவாகவே அவரிடம் பழகினாராம். அப்போது ஒரு நாள் ரஜினிகாந்த்தின் “நான் பொல்லாதவன்” என்ற பாடலை படமாக்கிக்கொண்டிருந்த சமயத்தில் புலியூர் சரோஜாவை பார்ப்பதற்கு அவரது இளம் வயது மகன் வந்திருக்கிறார்.

Puliyur Saroja
அப்போது புலியூர் சரோஜா, சில்க் ஸ்மிதாவிடம் தனது மகனை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். அப்போது அனைவரின் முன்னிலும் புலியூர் சரோஜாவின் மகனை கட்டிப்பிடித்தாராம் சில்க் ஸ்மிதா. அதன் பின் “உங்க பையன் சூப்பரா இருக்கார். எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” என கேட்டாராம்.
அதற்கு புலியூர் சரோஜாவின் மகன்,”நான் தற்போது காலேஜ் படிக்கிறேன். நான் நன்றாக படித்து நல்ல வேலையில் சேர்ந்து எனது தாய் தந்தையரை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆதலால் உங்களுக்கு என்னை விட ஒரு நல்ல அழகான பையன் கிடைப்பான்” என கூறியிருக்கிறார்.
கோபம் கொண்ட சில்க் ஸ்மிதா
அதன் பின் புலியூர் சரோஜாவை மிகவும் வற்புறுத்தியுள்ளார் சில்க் ஸ்மிதா. ஆனால் புலியூர் சரோஜாவோ, “என் பையன் இப்போ காலேஜ் படிக்கிறான். அவன் படிப்பை என்னால் கெடுக்க முடியாது. உனக்கு வேற ஒரு நல்ல பையனை பார்க்கலாம்” என கூறியிருக்கிறார்.

Silk Smitha
ஆதலால் சில்க் ஸ்மிதா, புலியூர் சரோஜாவை கோபித்துக்கொண்டாராம். சில நாட்கள் அவருடன் பேசக்கூட இல்லையாம். அதன் பிறகு சில்க் ஸ்மிதாவே தானாக சென்று பேசியிருக்கிறார். அதன் பின் சில வருடங்களுக்கு பிறகுதான் சில்க் ஸ்மிதா ஒரு டாக்டரை காதலித்து திருமணம் செய்யவுள்ளதாக இருந்ததாம். அதனை தொடர்ந்துதான் ஒரு நாள் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டார் சில்க் ஸ்மிதா.
இதையும் படிங்க: ஆண்ட்டியின் கட்டுப்பாட்டில் இருந்தாரா நடிகர் கரண்?… மார்கெட் போனதுக்கு இதுதான் காரணமா?..