Categories: latest news

வலிமைல அஜித் தான் ஹீரோங்கிறதே எனக்கு தெரியாது.! ரசிகர்களை ஷாக் ஆக்கிய பிரபலம்.!

அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த திரைப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். பைக் ரேஸிங், குற்றங்கள் என படம் நகர்கிறது.

இந்த படத்தில் விஜய் டிவி புகழ்,  கலக்கப்போவது யாரு சில்மிஷம் சிவா சில வளர துடிக்கும் இளம் நடிகர்கள் நடித்திருந்தனர். அதில் சில்மிஷம் சிவா அண்மையில், ஒரு பேட்டியில் இந்த படத்திற்கு கிடைத்த வாய்ப்பு பற்றி தெரிவித்தார்.

அதாவது, கலக்கப்போவது யாரு பைனல் நாளுக்கு முந்தைய நாள் வாய்ப்பு வந்தது. போன் செய்து படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என கூறினர். பைனல் நாளன்று இங்கு வர சொன்னார்கள். நாள் மறுநாள் வருவதாக கூறினேன்.

இதையும் படியுங்களேன் – தப்பித்துக்கொண்ட ரசிகர்கள்.! அஜித்தின் அடுத்த பட கதாபாத்திரம் இதுதான்.!

அவர்களும் ஓகே என்று எனக்கு விமான டிக்கெட் அனுப்பி வைத்தனர். அதற்கு முன்னர் விமான டிக்கெட் பார்த்தது இல்லை. அதுதான் முதல் முறை. ஷூட்டிங் செல்லும் வரை வலிமை படத்தில் நடிக்க போகிறோம். வலிமை படத்தில் அஜித் சார் தான் ஹீரோ என எதுவும் தெரியாது. படத்தில் நடிக்க போகிறோம் அவ்வளோதான் தெரியும்.

ஷூட்டிங் போகும் போது தான் தன்னை கூப்பிட்டு வந்தவரிடம் யாரு ஹீரோனு கேட்டேன் அப்போது தான் தல கூட தான் நீங்க நடிக்க போறீங்கனு சொன்னார் எனக்கு அப்டியே பறப்பது போல இருந்தது. பிளைட்டில் போகும் போது அஜித் சாரிடம் என்ன பேசுவது, அவர் நம்மிடம் பேசுவாரா என கேள்விகள் ஓடி கொண்டிருந்தது.  இறுதியில், அஜித் சாரை செட்டில் பார்த்தேன். அவர் என்னிடம் நன்றாக பேசினார். என தனது அனுபவத்தை மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

Published by
Manikandan