சிம்பு படத்தில் தொடர்ந்து நீடிக்கும் பிரச்சனை.. ‘சிம்பு49’ படத்தில் இப்படி ஒரு சிக்கலா?

by Rohini |   ( Updated:2025-04-29 08:05:19  )
simbu
X

simbu

Simbu: தற்போது சிம்பு ஒரு மாடலிங் மாதிரி தன்னுடைய உடை, தோற்றம் என முற்றிலுமாக மாறி படு ஸ்டைலாக தன்னை காட்டி வருகிறார். மாநாடு திரைப்படத்திற்கு பிறகு அவருடைய லுக்கே மாறி போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப் படத்தின் வெற்றி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார் சிம்பு. பத்துதல, வெந்து தணிந்தது காடு என அவருடைய கெரியரில் வித்தியாசமான படங்களில் நடித்து அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இந்தப் படங்களினால் சிம்புவின் மார்கெட் கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தொடங்கியது. அந்த நேரத்தில் ராஜ்கமல் நிறுவனம் கொஞ்சம் தலைதூக்க ஆரம்பிக்க சிம்புவை கைக் கொள்ள போட நினைத்து ஒரு படத்தில் கமிட் செய்தது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுக்க நினைத்த ராஜ்கமல் நிறுவனம் பட்ஜெட் நினைத்ததை விட அதிகமானதால் இந்தப் படத்தை கிடப்பில் போட்டது.

இதற்கிடையில் கமல் மணிரத்னத்துடன் கைகோர்க்க சிம்புவின் படத்தில் இருந்து விலகியது ராஜ்கமல் நிறுவனம். இருந்தாலும் சிம்புவை விட்டுக் கொடுக்காத கமல் மணிரத்னம் ப்ராஜக்ட்டில் சிம்புவை இணைத்துக் கொண்டார். இவர்கள் இணையும் தக் லைஃப் படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீஸாக இருக்கின்றது. இந்தப் படத்திற்கு பிறகு சிம்புவின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

பார்க்கிங் இயக்குனருடன் தனது 49 வது படத்தில் இணைந்தார் சிம்பு. இந்தப் படம்தான் இப்போது ஆரம்பிக்கப்படும் என்றிருந்த நிலையில் அந்த இயக்குனருக்கே இந்த ஸ்கிரிப்ட்டில் முழு திருப்தி இல்லாததால் கதையில் கொஞ்சம் மாற்றம் தேவைப்படுகிறது என கூறினாராம். சிம்புவின் தரப்பிலும் இதே மாதிரியான மன நிலையில்தான் இருக்கிறார்கள். அதனால் இந்த ப்ராஜக்டை இரண்டு மாதகாலம் தள்ளி வைப்பதாக பேசியிருக்கிறார்களாம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் சிம்புவின் 50 படத்திற்கான ப்ரோமோ வீடியோவை ரெடி பண்ணிவிடலாம் என்ற ஐடியாவில் இருக்கிறாராம் சிம்பு. இந்தப் படத்தைத்தான் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இதற்கு அடுத்தபடியாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் சிம்பு அவருடைய 51வது படத்தில் இணைய இருக்கிறார். ஆரம்பத்தில் ஒழுங்காக சூட்டிங்கே வரமாட்டார் சிம்பு என்று விமர்சனம் இருந்த நிலையில் இப்போது அந்த இரண்டு மாதம் கூட சும்மா இருக்கக் கூடாது என நினைத்து அடுத்த படத்திற்கான ப்ரோமோ வேலைகளில் கவனம் செலுத்தலாம் என நினைக்கும் சிம்புவின் இந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

Next Story