மாநாடு படத்தை காப்பி அடிக்கும் சிம்புவின் புதிய படக்குழு.! இந்த தடவை ஒர்கவுட் ஆகுமா.?!
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு தனது அடுத்தடுத்த திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அடுத்ததா சில்லுனு ஒரு காதல் திரைப்பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல எனும் திரைப்படத்தில் டான் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே குண்டாக இருக்கும் போது அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, சில நாட்கள் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு மாநாடு திரைப்படத்தை ஒட்டி அவர் உடல் எடையை குறைத்து ஒல்லியான தேகத்திற்கு மாறிவிட்டார்.
இதனால் பத்து தல படக்குழு சிம்புவிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளது. அதாவது நீங்கள் பழையபடி அதிக எடை கொண்ட மனிதராக மாற வேண்டாம். மாறாக இப்போது இருப்பதை தாண்டி கொஞ்சம் உடல் பருத்து இருந்தால் போதும் என்று கூறியுள்ளது.
இதையும் படியுங்களேன் - இரண்டு கார்த்திக்குகளை நம்பி மோசம் போன தனுஷ்... இனியாவது இப்படி பண்ணாதீங்க தனுஷ்....!
அவ்வாறு சிம்பு கொஞ்சம் உடல் எடை அதிகரித்தால், மாநாடு திரைப்படத்தின் குண்டாக இருந்த சிம்புவை கிராபிக்ஸ் பணிகள் மூலம் ஒல்லியாக காட்டியது போல, இந்தப்படத்தில் கொஞ்சம் உடல் எடையை ஏற்றி இருக்கும் சிம்புவை மீண்டும் பழையபடி கொஞ்சம் குண்டாக காட்டிவிடலாம். அப்போது அந்த டான் கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
மாநாடு யுக்தியை அப்படியே உல்டாவாக ஒல்லியாக இருக்கும் சிம்புவை குண்டாக காட்ட பத்து தல படக்குழு முடிவு செய்துள்ளதாம். இது சரியாக வருமா என்று படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வரும்போது நமக்கு தெரியவரும்.