மீண்டும் முன்னாள் காதலியுடன் இணைந்த சிம்பு.... ரசிகர்கள் அதிர்ச்சி.....

by ராம் சுதன் |
simbu
X

சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள மாநாடு படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதுதவிர வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பத்து தல உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன. தற்போது மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து மேலும் பல புதிய படங்களின் வாய்ப்பும் சிம்புவிற்கு குவிந்த வண்ணம் உள்ளதாம்.

அந்த வகையில் ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நந்தா பெரியசாமி அடுத்ததாக இயக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ளாராம். நந்தா பெரிய சாமி சொன்ன கதை சிம்புவிற்கு பிடித்துப் போக உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

பின்னர் படத்தில் யாரை ஹிரோயினாக நடிக்க வைக்கலாம் என்ற பேச்சு எழுந்த போது, இயக்குனர் நந்தா ஹன்சிகா மோத்வானியின் பெயரை தயக்கத்துடன் கூறியுள்ளார். இதை கேட்ட சிம்பு, கதைக்கு அவர் தேவைப்பட்டால் கமிட் செய்து கொள்ளுங்கள் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என கூறிவிட்டாராம். சிம்புவின் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத இயக்குனர் மகிழ்ச்சியுடன் படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம்.

hansika

hansika

சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து ஏற்கனவே வாலு என்ற படத்தில் நடித்துள்ளனர். அந்த சமயத்தில் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தற்போது நல்ல நண்பர்களாக உள்ளனர். அந்த நட்பின் அடையாளமாகவே ஹன்சிகாவின் 50 வது படமான மஹா படத்தில் அவரின் காதலனாக சிம்பு நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிம்பு அவரது முன்னாள் காதலிகளுடன் நல்ல நட்பு பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சிம்புவின் மற்றொரு முன்னாள் காதலியான நயன்தாராவுடன் சேர்ந்து இது நம்ம ஆளு படத்தில் சிம்பு நடித்திருந்தார். என்னதான் அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்தாலும், அவர்களை நல்ல தோழியாக கருதும் சிம்புவின் மெச்சூரிட்டி லெவலை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Next Story