கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட மாநாடு திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் மோத வேண்டாம் என்பதற்காக ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.
மாநாடு படம் எப்போ வருதோ அதுதான் தீபாவளி என எஸ்.ஜே. சூர்யா சொன்னதை போலவே தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த பெரிதாக ஓடாமல் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது.
அடுத்து சிம்புவின் படம் எப்போ வரப் போகுது என காத்திருந்த ரசிகர்களுக்கு, வெந்து தணிந்தது காடு, மஹா, பத்து தல என ஏகப்பட்ட அப்டேட்டுகள் வெளியாகின.
ஆனால், வழக்கம் போல அத்தனை படங்களும் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து கால தாமதம் ஆனது.
வெந்து தணிந்தது காடு படத்தை ரிலீஸ் செய்ய எல்லா ஏற்பாடுகளையும் சிம்பு செய்து வந்த நிலையில், திடீரென அவரது தந்தை டி. ராஜேந்தர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அட்மிட் ஆனது மொத்த திட்டத்தையும் கெடுத்தது.
அப்பாவின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய அமெரிக்கா புறப்பட்ட சிம்பு அங்கே டி. ராஜேந்தரின் சிகிச்சைக்கு தேவையான விஷயங்களை செய்து முடித்த பின்னர் தந்தையை வரவழைத்தார்.
இந்நிலையில், சிம்புவின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
ஆனால், அந்த ரிலீஸ் தேதி அறிவிப்பில் நடிகர் ஜெயம் ரவிக்கு பெரிய தர்ம சங்கட நிலை ஏற்பட்டுள்ளது தான் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பொன்னியின் செல்வன் ரிலீஸ் தள்ளிப் போகும் என்பதை அறிந்து கொண்ட ஜெயம் ரவி அகிலன் படத்தின் ரிலீஸை செப்டம்பர் 16ம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15ம் தேதி திரைக்கு வருவதாக வெளியான அறிவிப்பு காரணமாக செப்டம்பர் மாதம் சிம்பு மற்றும் ஜெயம் ரவி படங்களுக்கு இடையே மிகப்பெரிய கிளாஷ் உருவாகும் என்பது தெரிகிறது.
கெளதம் மேனன் இயக்கம், சிம்பு ஹீரோ, சித்தி இத்னானி ஹீரோயின், ஏ.ஆர். ரஹ்மான் இசை என பெரிய பட்டாளத்துடன் ரிலீசாகப் போகும் வெந்து தணிந்தது காடு வெப்பத்தில் அகிலன் தாங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
Viduthalai2: ஒளிப்பதிவாளர்…
சிவகார்த்திகேயன் படங்கள்…
கங்குவா படத்தின்…
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…