உயிர்போகும் நிலையில் இருந்த ஹிட் பட தயாரிப்பாளர்… எட்டிக்கூட பார்க்காத சிம்புவும் தனுஷும்… அடப்பாவமே!

Dhanush and Silambarasan
சிம்பு, தனுஷ் ஆகிய இருவரும் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இருந்தே போட்டி நடிகர்களாக பார்க்கப்படுகிறார்கள். சிம்பு, சிறு வயதில் இருந்தே நடித்து வந்தாலும், அவர் “காதல் அழிவதில்லை” திரைப்படத்தின் மூலம்தான் கதாநாயகனாக அறிமுகமானார். எனினும் சிம்புவுக்கு மிகப்பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக “மன்மதன்” திரைப்படம் அமைந்தது.

Dhanush and Silambarasan
அதே போல் தனுஷ், “துள்ளுவதோ இளமை” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், அவர் நடித்த “திருடா திருடி” திரைப்படம் அவரது கேரியரில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இவ்வாறு இந்த இரு டாப் கதாநாயகர்களுக்கும் திருப்புமுனையாக அமைந்த இத்திரைப்படங்களை தயாரித்தவர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த்.
உடல் நலக்குறைவு
எஸ்.கே.கிருஷ்ணகாந்த் தனது இந்தியன் தியேட்டர் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக “திருடா திருடி”, “புதுக்கோட்டையில் இருந்து சரவணன்”, “மன்மதன்”, “கிங்” போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு இருதய பாதிப்பால் மரணமடைந்தார்.

Krishnakanth
இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், தனது வீடியோ ஒன்றில் கிருஷ்ணகாந்த்தை குறித்து ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார்.
யாரும் உதவவில்லை
“திருடா திருடி என்ற வெற்றிப்படத்தை தனுஷுக்கும் மன்மதன் என்ற வெற்றிப்படத்தை சிம்புவுக்கும் கொடுத்த தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்துக்கு சிம்பு, தனுஷ் ஆகிய இருவருமே அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது உதவுவார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த தயாரிப்பாளரான கிருஷ்ணகாந்த் இறக்கின்ற வரையிலே இருவருமே அவருக்கு உதவி செய்யவில்லை” என மிகவும் வருத்தத்தோடு கூறியிருந்தார்.

Silambarasan and Dhanush
மேலும் பேசிய அவர், “பிதாமகன் படத்தின் தயாரிப்பாளரான வி.ஏ.துரையும் மிகப் பெரிய பொருளாதார சிக்கலில், தன்னுடைய உடல் நலத்தை கூட பார்த்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறார். அவரது திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அடையாளத்தை பெற்ற விக்ரமோ, அல்லது அந்த படத்தின் மூலம் மிகப்பெரிய புகழ்பெற்ற பாலாவோ ஏன் அவருக்கு உதவ முன்வரமாட்டிக்கிறார்கள் என்று இன்று வரை தெரியவில்லை” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினிக்கு வைத்திருந்த மிரட்டலான கதை… சிம்புவுக்கு அடித்த ஜாக்பாட்… ஒஹோ இதுதான் விஷயமா?