டிராகன் ஹீரோயின் பக்கத்துல மாப்பிள்ளை கணக்கா சிம்பு!.. எஸ்டிஆர் 49 படத்துக்கு ஜோரா பூஜை போட்டாச்சு!

நடிகர் சிம்பு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவயுள்ள தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ள எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. மேலும், அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள எஸ்டிஆர் 49 படத்தின் பூஜை இன்று நடைப்பெற்றது. இப்படத்தில் கயாடு லோஹர், சந்தானம், விடிவி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். மேலும், இளம் சென்ஷேனல் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். பார்க்கிங் படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்டிஆர் 49 படத்திற்கும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

நடிகர் சந்தானம் காமெடியனாக தொடங்கி தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த நிலையில் தற்போது சிம்புவுக்காக மீண்டும் எஸ்டிஆர் 49 படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ’டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் நடித்து முடித்து விட்டு இப்படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
அதையடுத்து சிம்பு இயக்குநர் தேசிங்கு பெரியசாமியுடன் எஸ்டிஆர் 50வது படமும், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் 51வது படமும் கமிட்டாகியுள்ளார். உடல் எடையை குறைத்து கம் பேக் கொடுத்த சிம்புவிற்கு பட வாய்ப்புகள் குவிந்துள்ளது. தக் லைஃப் படத்தின் ரிலீஸுக்கு பிறகு தொடர்ந்து சிம்புவின் மார்க்கெட் உச்சத்துக்கு செல்லும் என்கின்றனர்.
இந்நிலையில், இன்று எஸ்டிஆர் 49 படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் சிம்பு, கயாடு லோஹர், சந்தானம், ராம்குமார் கிருஷ்ணன், விடிவி கணேஷ், சாய் அபயங்கர் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். நடிகர் சிம்பு வெள்ளை வேட்டி மற்றும் சட்டை அணிந்துக் கொண்டு மாப்பிள்ளை போல வந்தார். டிராகன் பட நடிகை கயாடு லோஹர் அழகாக வந்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.