கிங் கோலியாக சிம்பு!.. அனுஷ்கா சர்மாவாக மறுபடியும் அந்த நடிகையா?.. ஏதோ இடிக்குதே!..

by Saranya M |   ( Updated:2025-05-02 06:53:43  )
virat kohli
X

நடிகர் சிம்பு தற்போது பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், சிம்பு கைவசம் எஸ்டிஆர் 50 மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 51 என அடுத்தடுத்து படங்கள் உள்ளன. இந்நிலையில், அடுத்ததாக இந்திய முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக்கில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடல் இடையை குறைத்து கம்பேக் கொடுத்துள்ள சிம்பு தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியும் நடித்தும் வருகிறார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ”ஜிங்குச்சா” பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. வரும் ஜூன் 5ம் தேதி படம் வெளியாகி தெறிக்கப்போகிறது.

நடிகர் சிம்பு இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 50 படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீக்கிரமே பார்க்கிங் பட இயக்குநர் படத்தில் சந்தானம் மற்றும் கயாடு லோஹர் உடன் இணைந்து கலக்க உள்ளார்.

மேலும், சிம்பு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள எஸ்டிஆர் 51 படத்தில் அடுத்த வருஷம் நடிக்க உள்ளார் என்கின்றனர். அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி தேர்ந்தெடுக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது என்கின்றனர்.

ஓ மை கடவுளே, டிராகன் போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள அஷ்வத் மாரிமுத்து எஸ்டிஆர் 51 படத்தை இயக்கியுள்ளதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் ஆர்சிபி அணியின் கிங் கோலியான விராட் கோலியின் வாழ்க்கையை படமாக்க உள்ளதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. அதில் விராட் கோலி கதாப்பாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கோலி அதிகம் விரும்பி கேட்கும் பாடல் பத்து தல படத்தில் இடம்பெற்ற “நீ சிங்கம் தான்” பாடல் என கோலி பதில் அளிக்க அதற்கு சிம்புவும் நன்றி தெரிவித்திருந்தார். மேலும், இந்த படத்தில் அனுஷ்கா சர்மாவாக நடிகை த்ரிஷா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தக் லைஃப் படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

Next Story