சிம்புவிற்கு கீபோர்டு வாசித்த அனி..! முதன்முறையாக ஜோடி சேர்ந்த கூட்டணி...

தமிழ் சினிமாவில் அடுத்த ஜென்மம் என்றே சொல்லலாம் நடிகர் சிம்புவிற்கு. ஆரம்பத்தில் பல பிரச்சினைகளில் சிக்கி படமே இல்லாத நிலையில் சில நாள்கள் அப்படியே கழித்து அடுத்த ரவுண்டு ஆரம்பித்துள்ளார் மாநாடு படம் மூலம்.
இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் கைவசம் படங்களோடு பிஸியாக சுற்றிக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில் இவரும் இசையமைப்பாளார் அனிருத்தும் ஜோடி சேர்ந்து மேடையை அலங்கரித்தனர்.
அப்போது அனியிடம் எப்போ உங்கள் கூட்டணி என்ற கேள்வி கேட்டதற்கு விரைவில் அதுவும் பயங்கரமாக இருக்கும் என கூறினார். மேலும் அவர் கூறுகையில் நானும் சிம்புவும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஸ்கூலில் எனக்கு அவர் சீனியர். ஸ்கூல் கல்சர் நாளில் சிம்புவின் நிகழ்ச்சிக்காக நான்தான் கீபோர்டு வாசிப்பேன் என கூறினார்.
இதை கேட்ட கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர். இதே கேள்வி சிம்புவிடமும் கேட்க அவரும் அதே பதிலைதான் சொன்னார் அனி பயங்கரமா இருக்கும்னு சொன்னார் ஆனால் அதைவிட பயங்கரமா இருக்கும் என சிம்பு கூறியுள்ளார்.