Actor Simbu: லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து இன்று ஒரு நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் நன்கு கற்று அறிந்தவர். இரண்டு வயதிலிருந்து இந்த சினிமா அவருக்கு கைவந்த கலை. சினிமாவைப் பற்றி தெரியாதது எதுவும் இல்லை இவருக்கு.
சினிமா பின்புலத்திலிருந்து வந்தாலும் இவரும் ஏகப்பட்ட போராட்டங்களை கடந்துதான் வந்திருக்கிறார். மாநாடு படம் முன்பு வரை இவருடைய ராசியில் சனி நிரந்தரமாக உட்கார்ந்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும் .அந்த அளவுக்கு மாநாடு படத்திற்கு முன்பு வரை இவருடைய எந்த படங்களும் சரியாக போகவில்லை. மாநாடு படம்தான் இவருக்கு ஒரு சரியான கம் பேக் கொடுத்த படமாக அமைந்தது .
இதையும் படிங்க: வெளில புலி.. இவர்கிட்ட பூனை! ரஜினி பார்த்து பயப்படுகிற ஒரே ஆள் இவர்தானாம்
அதன் பிறகு வந்த பத்து தல, வெந்த தணிந்தது காடு போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது கமலுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு முரட்டு சிங்கிளாக வலம் வரும் சிம்புவிடம் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்ற ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கு சிம்புவின் பதில் நெத்தியடி பதிலாக அமைந்தது. அதாவது முதலில் இந்த உலகத்தில் நல்லது எது கெட்டது எது என லிஸ்ட் போட்டு கொடுங்கள். ஏன்னா நல்லது என்ன? கெட்டது என்ன ?என்பது எனக்கு தெரியல. ஏன் யாருக்குமே தெரியாது. பிறகு எதுக்கு என்கிட்ட மட்டும் கேட்கிறீங்க? கொலை பண்ணுவது தப்பு தானே?
இதையும் படிங்க:அப்பா பெயரையே பயன்படுத்த மாட்டியா?.. சிவாஜி மகனுக்கு என்ன நிலைமை ஆச்சு தெரியுமா?.. பிரபலம் பேச்சு!..
அது தப்புன்னு தெரியும். அப்புறம் ஏன் கொலை பண்ற அப்படின்னு கேட்கலாம். சரி அது தப்புதான் .ஒரு சின்ன குழந்தையை ஒருத்தன் குத்தி கொலை பண்ண போறான். அவன தடுத்து அந்த குழந்தையை காப்பாத்துறதுக்காக அவனை கொலை பண்றது ஒரு தப்பா ?அதனால எல்லாரும் என்ன புரிஞ்சிக்கணும்னா?
எதுவுமே சரி கிடையாது. தப்பும் கிடையாது. எதுவும் நல்லது கிடையாது. கெட்டதும் கிடையாது. கடவுளும் இல்ல. ஆவியும் இல்ல. எல்லாமே இங்கு ஒன்று தான். ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ப நீ நல்லவனா இருக்கணும்னா அந்த சூழ்நிலைக்கு நீ நல்லவனா இரு. அந்த சூழ்நிலைக்கு நீ கெட்டவனா மாறனும் அப்படின்னு இருந்தால் கெட்டவனா மாறிவிடு. இதுதான் வாழ்க்கை என்று மாஸாக பதில் கூறியிருக்கிறார் சிம்பு.
இதையும் படிங்க: நடிக்கனு கூப்பிட்டு அவங்க எதிர்பார்த்ததே வேற! குஷ்பு படத்தில் நடிகைக்கு ஏற்பட்ட அவலம்
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…