என்னது சிம்புவுக்கு ஜோடி அசினா? போட்டோ சூட்டெல்லாம் எடுத்து டிராப் ஆன படம்.. என்ன ரீசன் தெரியுமா?

asi
Simbu Asin: இன்று ஹீரோ ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ இல்லையோ குணச்சித்திர படங்களில் நடித்துவரும் பல கலைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்களை பெரும்பாலும் எல்லா படங்களிலும் நம்மால் பார்க்க முடிகிறது. உதாரணமாக சரத்குமார், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் எல்லாம் அவரவர் திறமைக்கேற்ப நடித்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக எஸ் ஜே சூர்யா பெரும்பாலும் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக நடித்து அவர்களையே ஓவர் டேக் செய்து போய்க் கொண்டே இருக்கிறார். ஆரம்பத்தில் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா அவர் இயக்கிய இரண்டு படங்களுமே காலம் காலமும் நிலைத்து நிற்கும் வகையில் அமைந்த படங்களாகும்.
இதையும் படிங்க: குட்டி இடுப்பு செம கும்தவா இருக்கு!.. வேதிகாவை ஜூம் பண்ணி ரசிக்கும் ரசிகர்கள்!…
அதிலும் இரு பெரும் டாப் ஹீரோக்களான விஜய் அஜித் ஆகியோர்களை வைத்து வாலி, குஷி போன்ற இரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்ததன் மூலம் இன்றளவும் எஸ் ஜே சூர்யா வின் கெரியர் அந்த இரு படங்களாலேயே பெருமளவு பேசப்பட்டு வருகிறது. அந்த இரு படங்களுக்குப் பிறகு அவர் ஏன் படத்தை இயக்கவில்லை?
இப்போது ஒரு படத்தை கொடுக்கலாமே என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள். ஆனால் அந்த படங்களுக்குப் பிறகு அவர் இயக்கவிருந்த ஒரு படம் அதுவும் சிம்புவை வைத்து. இதைப் பற்றிய ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் சிம்பு, அசின் ஆகியோர் நடிப்பில் ஏசி என்ற பெயரில் ஒரு படம் தயாராகும் நிலையில் இருந்ததாம்.
இதையும் படிங்க: திவ்யாவாக திரையுலகை திண்டாட வைத்த சோனியா.. த்ரிஷா நயன் ரேஞ்சுக்கு ஏன் ஜொலிக்க முடியல?
அதற்காக போட்டோ சூட் எல்லாம் எடுத்து படப்பிடிப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் தயாரிப்பாளருக்கும் பட குழுவுக்கும் ஏதோ சில பிரச்சனை காரணமாக அந்த படம் அப்படியே டிராப் ஆனதாக சொல்லப்படுகிறது. இல்லையெனில் குஷி வாலி இந்த வரிசையில் அடுத்து இந்த படமும் ஒரு ஹிட் அடித்து இருக்கும் என்று கருதப்படுகிறது.