Simbu Isari Ganesh:தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஹீரோவாக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. நீண்ட நாளுக்கு பிறகு மாநாடு திரைப்படம் அவருக்கு ஒரு சரியான கம்பேக் கொடுத்த திரைப்படமாக அமைந்தது .அதன் பிறகு வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்தார் சிம்பு. அந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்தார். அந்த படத்திற்கு பிறகு கொரோனா குமார் என்ற படத்தை தயாரிக்க சிம்புவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு இருந்தார் ஐசரி கணேஷ் .
ஆனால் அந்த ஒப்பந்தம் போட்டு பல ஆண்டுகள் கடந்தும் படம் சம்பந்தமான எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்தன. இதனால் அந்த படத்தை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது. அதாவது அந்த படம் அப்படியே கைவிடப்பட்டது என்றும் படத்தில் இருந்து சிம்பு விலகி விட்டார் என்றும் பல வதந்திகள் பரவின. அது மட்டுமல்லாமல் கொரோனா குமார் படத்திற்காக சிம்பு 4.5 கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகை வாங்கியதாகவும் சொல்லப்பட்டது.
இதையும் படிங்க: இக்கட்டான நிலையில் ஷாலினி! ‘விடாமுயற்சி’க்காக தன் மனைவியின் கஷ்டத்தைக் கூட பொருட்படுத்தாத அஜித்
கிட்டத்தட்ட பல வருடங்கள் ஆகியும் சிம்பு அந்த படத்தில் நடிக்காமல் தன்னை ஏமாற்றி வருகிறார் என ஐசரி கணேஷ் நீதிமன்றத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் .அது தொடர்பான கேஸ் தான் நீதிமன்றத்தில் சமீப காலமாக நடந்து வந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் சிம்புவுக்கு திரைப்படங்களில் நடிக்க இடைக்கால தடை விதித்திருந்தது.
இதற்கிடையில் தான் சிம்பு மணிரத்தினம் இயக்கம் படத்தில் இணைந்தார். இது தெரிந்த ஐசரி கணேஷ் அந்த படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்றும் அந்த படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்றும் கூறியதாக செய்தி வெளியானது. இப்படி இவர்களுக்குள் ஒரு பிரச்சனை சென்று கொண்டிருக்க சிம்புவை வைத்து டைனோசர் படத்தை எடுத்த பி ஆர் மாதவன் ஒரு படத்தை இயக்குவதாக ஒரு செய்தி வெளியானது.
இதையும் படிங்க: அரண்மனை 4, மகாராஜா ரெண்டுமே 100 கோடி வசூல் பண்ணல!.. மனசாட்சியோடு உருட்டுங்கப்பா!..
பி ஆர் மாதவன் சொன்ன கதை சிம்புவுக்கு பிடித்துப் போக அவரை ஐசரி கணேசனிடம் அனுப்பி வைத்திருக்கிறார் சிம்பு. அவருக்கும் அந்த கதை பிடிக்க அந்த படத்தை பண்ணலாம் என சொல்லி இருக்கிறார் ஐசரி கணேஷ். ஆனால் இதில் சிம்பு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக சம்பளத்தில் கறாராக நிற்கிறாராம்.
அதாவது தனக்கு போட்டியாக நினைக்கும் தனுஷ் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக தனக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என ஐசரி கணேஷிடம் மல்லுக்கு நிற்கிறாராம் சிம்பு. கிட்டத்தட்ட 50 கோடி அளவில் சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த பிரச்சனையும் அப்படியே போய்க் கொண்டிருக்கின்றது.
இதையும் படிங்க:தொடர்ந்து 10 மணி நேரம் விஜயால் எப்படி நிற்க முடிந்தது? காரணத்தை சொன்ன தயாரிப்பாளர்
TRP Tamil:…
தமிழ்நாடு திரையரங்கு…
Dhanush SK: …
தமிழ் தெலுங்கு…
நடிகை திரிஷா…