Categories: latest news

என்ன போயிட்டுருக்கு……? நீங்க என்ன பேசிட்டு இருங்கீங்க…? சிம்புவை வெட்கப்பட வைத்த அந்த பிரபலம்….!

கடந்த ஆண்டு சிம்புவின் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மக்கள் மத்தியில் சிம்புவின் மேல் ஒரு தனி எதிர்பார்ப்பு கூடியுள்ளதாகவே தெரிகிறது. அவரின் அப்டேட்ஸ்களை கூர்ந்து கவனித்து வருகிறார்கள் சிம்புவின் ரசிகர்கள்.

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் சிம்பு தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்த பாடல் யூ-ட்யூப்பில் மில்லியன் கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர். விரைவில் வெந்து தணிந்தது காடு படம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து ’பத்து தல’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இந்த படத்திற்காக தனது கெட்டப்புகளை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் சிம்பு நேற்று நடைபெற்ற கமலின் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தார்.

ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் சிம்பு லைட் ப்ளூ நிறத்தில் பேண்ட் சர்ட் அணிந்து பார்க்க ஸ்டன்னிங்கான தோற்றத்தில் சும்மா கெத்தா வந்து கலந்து கொண்டார். அவரை பார்த்த ரசிகர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினர். அப்போது அந்த விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி மேடையில் பேசுகையில் சிம்புவை பார்த்து “உங்கள் காஸ்ட்யூம் சூப்பரா இருக்கு, பார்க்க அழகா இருக்கீங்க, உங்க மாநாடு படத்தையும் பார்த்தேன் நல்ல நடிச்சிருந்தீங்க “ என கூற சிம்பு வெட்கப்பட்டு சிரித்ததாக தகவல் வெளியானது. ஏற்கெனவே சிம்புவும் விஜய் சேதுபதியும் இணைந்து ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Rohini