மாநாடு வெற்றி விழாவை புறக்கணித்த சிம்பு.... அடி பட்டும் திருந்தலையா?.....
சிம்பு என்றாலே சர்ச்சைதான். அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர், தயாரிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் குடைச்சலை கொடுத்துக்கொண்டே இருப்பார். திடீரென நல்ல பையனாக மாறி சாந்தம் காட்டுவார். ஆனாலும், அவரின் சுபாவம் என்னவோ மாறுவதே இல்லை. இதற்கு மாநாடு படத்தின் வெற்றி விழாவே சாட்சி.
சிம்புவுக்கு பல வருடங்களுக்கு பின் ஹிட் கொடுத்துள்ள திரைப்படம் மாநாடு. அதுவும் பல தடைகளை மீறி இப்படம் ஒருவழியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வசூலை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் வெற்றியை மாநாடு படக்குழுவினர் சமீபத்தில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் கொண்டடினர்.
இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் இப்படத்தால் லாபமடைந்த திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால், படத்தின் ஹீரோ சிம்பு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை என சாக்கு சொல்லப்பட்டது. ஆனால், அது நம்பும் படியும் இல்லை. அதில் உண்மையும் இல்லை.
டி.ராஜேந்தர் குடும்பத்திற்கு 9 எண் மீது எப்போதும் ஒரு செண்டிமெண்ட் உண்டு. டி. ராஜேந்தரின் படங்களின் தலைப்பு பெரும்பாலும் 9 எழுத்துக்கள் இருக்கும். பல வருடங்களாகவே இதை அவர்கள் பின்பற்றி வருகின்றனர். சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன், மாநாடு ஆகிய படங்கள் தொடர்பான அப்டேட்டுகள் அனைத்தும் இந்த செண்டிமெண்ட் நேரப்படியே வெளியானது.
மாநாடு படம் வெற்றியை பெற்று ரூ.100 வசூலை நெருங்கியது. ஆனால், 9 எண் செண்டிமெண்ட் படி ரூ.108 கோடி வசூல் செய்ததாக நீங்கள் அறிவிக்க வேண்டும், வெற்றி விழா மேடையிலும் இதை போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும் அப்போதுதான் வெற்றி விழாவுக்கு நான் வருவேன் என சிம்பு அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் அடம்பிடித்துள்ளார். ஆனால், சுரேஷ் காமாட்சி இதை ஏற்கவில்லை. முடியது என மறுத்துவிட்டார். இதில் கோபமடைந்த சிம்பு அந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதிலிருந்து சிம்பு இன்னும் மாறவே இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்!...
தனக்கு எல்லோரும் பிரச்சனை கொடுப்பதாக மாநாடு பட மேடை ஒன்றில் கண்ணீர்விட்ட சிம்பு, தன்னையும் மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லவா?..