இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக மாறினார். அதன்பின்னர் நயன்தாராவுடன் காதல் ஆன பிறகு அதைவிட அதிகமாகவே பிரபலமாக பேசப்பட்டார்.
ஆனால் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படம் சிம்பு நடித்த போடா போடி திரைப்படம் தான். இந்த திரைப்படம் ஒரு காதல் திரைப்படமாக உருவானது. இதனை இயக்க விக்னேஷ் சிவன் சம்மதிக்கும் போது அவருக்கு வயது வெறும் 22 தானாம்.
22 வயதில் இயக்குனராக அறிமுகமான போது சிம்பு அதில் நாயகனாக நடிக்கும் போது பல விதமாக உதவி செய்துள்ளாராம் சிம்பு. இதனை விக்னேஷ் சிவன் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்களேன் – இதுதான் 8வது அதிசயம்.! குடும்பத்துடன் திருமணத்தில் கலந்துகொண்ட அஜித்குமார்.!? காரணம் தெரியுமா.!
சிம்பு சார் சிறுவயதிலிருந்து சினிமாவில் இருக்கிறார். அதனால் அவருக்கு அதிகமான அனுபவங்கள் உண்டு. அவருக்கு பாடலில் எழுதுவதிலும், இயக்குவதிலும் பல அனுபவங்கள் உண்டு. பாடல் எழுதுகையில் சில இடங்களில் என்னை எழுத சொல்லி கூறுவார். உடனே நானும் இரண்டு வரிகள் எழுதி கொடுப்பேன்.
அப்படித்தான் எனக்கும் பாடல் எழுதுவது பரிச்சயமானது. இந்த விஷயத்தில் சிம்புவின் சினிமா அனுபவம் எனக்கும், எனது சினிமா வாழ்விற்கும் மிகவும் உதவியாக இருந்தது. என்பதை வெளிப்படையாக அந்த நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…