ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க!.. மேடையில் கண்ணீர் விட்ட சிம்பு…

Published on: November 18, 2021
simbu
---Advertisement---

சிம்பு என்றாலே பஞ்சாயத்து.. பஞ்சாயத்து என்றாலே சிம்பு என மாறிவிட்டது. அதற்கு காரணம் அவரின் கடந்த கால நடவடிக்கைகள்தான். படப்பிடிப்புகளுக்கு சரியாக செல்லாதது, திடீரென சம்பளத்தை உயர்த்தி கேட்பது, டப்பிங் பேச செல்லாதது என தயாரிப்பாளர்களுக்கு குடைச்சல் கொடுப்பவர். ஆனாலும், அவ்வபோது ஹிட் படம் கொடுப்பதால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஒருபக்கம் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர்.

simbu

அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படம் சிம்புவின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் தோல்வி படமாக அமைந்தது. அதனால், அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு பல கோடி நஷ்டம். சிம்பு தற்போது தன்னை மாற்றிக்கொண்டு நடித்து வந்தாலும், இந்த பிரச்சனை சிம்புவை பல வருடங்களாக துரத்தி வருகிறது. அவரின் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் அது பஞ்சாயத்தில் வந்து முடிகிறது.

simbu

வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாநாடு பட ரிலீஸுக்கும் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது. எனவே, அவரின் தாய் உஷா மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது புகார் கொடுத்தனர்.

simbu

இந்நிலையில், மாநாடு படம் தொடர்பான விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கண்ணீர் மல்க பேசிய சிம்பு ‘ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க…ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்..பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.  என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என பேசினார்.

மாநாடு திரைப்படம் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment