சிம்பு – தேசிங்கு பெரியசாமி படம் டிராப் ஆகிறதா?!.. என்னப்பா சொல்றீங்க?!.. நடப்பது என்ன?..

Published on: January 16, 2024
simbu2
---Advertisement---

Simbu: சிம்பு படம் என்றாலே பஞ்சாயத்துக்கு பஞ்சமிருக்காது. சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் திரையுலகில் பலரும் இருக்கிறார்கள். சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வரமாட்டார்.. திடீரென சம்பளத்தை ஏற்றி கேட்பார் என்பதுதான் அவர் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. அதனால்தான் திறமையான நடிகராக இருந்தும் இன்னும் முன்னணி நடிகராக மாறாமலேயே சிம்பு இருக்கிறார்.

அவருக்கு பின்னால் நடிக்க வந்த தனுஷ் கூட பாலிவுட், ஹாலிவுட் என போய்விட்டார். ஆனால், சிம்புவோ கோலிவுட்டிலேயே ஒரு நிரந்தர இடத்தை பிடிக்காமல் இருந்து வருகிறார். பல வருடங்களுக்கு பின் விண்ணை தாண்டி வருவாயா எனும் ஹிட் கொடுத்தார். அந்த படத்திற்கு பின் சில படங்கள் வந்தாலும் மாநாடு படம் மட்டுமே வசூல்ரீதியாக வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: சூர்யா மட்டுமில்ல.. கமலிடம் வாட்ச் கிப்ட் வாங்கிய வேற 3 நடிகர்கள் இருக்காங்க!.. வாங்க பார்ப்போம்…

கடைசியாக வெளியான பத்து தல படமும் ஓடவில்லை. அப்போதுதான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஒரு சரித்திர கதையை உருவாக்கினார். இந்த கதை ரஜினியிடம் சென்று அவருக்கு இயக்குனர் மேல் நம்பிக்கை இல்லாமல் விலகிக்கொள்ள கமலை சந்தித்து கதை சொன்னார் பெரியசாமி.

simbu
simbu

அந்த கதை கமலுக்கு பிடித்துப்போக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சிம்பு நடிப்பதாக அறிவிப்பெல்லாம் வெளியானது. ஆனால், அதோடு சரி. பல மாதங்கள் ஆகியும் படப்பிடிப்பு இப்போதுவரை துவங்கவில்லை. சிம்புவோ பல மாதங்களாக தமிழ்நாட்டிலேயே இல்லை. பல மாதங்களாகவே இப்படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: டி.ஆர்.பி-யில் டாப்பில் இருக்கும் 5 சீரியல்கள்!.. நீச்சல் அடிக்க முடியாம தவிக்கும் எதிர்நீச்சல்

இந்நிலையில், இப்படம் டிராப் என செய்திகள் வெளியாக துவங்கிவிட்டது. இது சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆனால், ராஜ்கமல் தரப்பு இதை மறுத்துள்ளது. சிம்பு – தேசிங்கு பெரிசாமி இணையும் இந்த படம் 2007ம் வருடம் ஹாலிவுட்டில் வெளிவந்த 300 போன்ற அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் கொண்ட ஒரு திரைப்படமாகும். எனவே VFX காட்சிகள் அதிகமாக இருக்குமாம்.

ஒரு நிறுவனத்திடம் இந்த வேலையை கொடுத்து அதன் காட்சிகள் லீக் ஆகிவிட்டால் என்னாவது என நினைத்த கமல் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திலேயே ஒரு அறையை ஒதுக்கிக்கொடுத்து VFX காட்சிகளை அங்கே துவங்க சொல்லிவிட்டாராம். எனவே, விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகைக்கு நள்ளிரவில் கால் செய்து அழைத்த தனுஷ்!… விவாகாரத்து செய்து துரத்திய கணவர்!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.